Last Updated : 02 Apr, 2022 07:04 AM

1  

Published : 02 Apr 2022 07:04 AM
Last Updated : 02 Apr 2022 07:04 AM

நூற்றாண்டு நாயகர் டி.எம்.எஸ்.

தமிழ்த் திரைப்படங்கள் பேசவும் பாடவும் தொடங்கிய முப்பதுகளிலேயே பின்னணிப் பாடகர்களும் அறிமுகமாகிவிட்டார்கள் என்றாலும், ஐம்பதுகளில்தான் அவர்கள் பெரும்புகழ் பெறத் தொடங்கினார்கள். 1950-ல் ‘கிருஷ்ணவிஜயம்’ படத்தில் பின்னணி பாடத் தொடங்கியவர் டி.எம்.சௌந்தரராஜன். 1954-ல் வெளிவந்த ‘தூக்குத் தூக்கி’ அவரைப் புகழின் உச்சிக்குத் தூக்கிச் சென்றது. ஐம்பதுகளில் தொடங்கிய அவரது இசை சாம்ராஜ்யம் எண்பதுகள் வரையில் நீடித்தது. அவர் அதிகம் பாடியது சிவாஜிக்கு. இரண்டாவதாக எம்ஜிஆர்.

மூன்றாவதாக ஜெய்சங்கர். ஏறக்குறைய 40 ஆண்டு காலம் 851 திரைப்படங்களில் டி.எம்.எஸ். பாடிய 2,053 பாடல்களின் முதலடிகளைத் தொகுத்து, இந்நூலில் வழங்கியிருக்கிறார் பொன்.செல்லமுத்து. அவர் பாடிய படங்களின் ஆண்டு வரிசை, அகர வரிசை, அவற்றின் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், பாடலாசிரியர்கள், இயக்குநர்கள், நடிகர்கள், சக பாடகர்கள் என்று டி.எம்.எஸ். இசையுலகத்தை வெவ்வேறு கோணங்களிலிருந்து பட்டியலிட்டிருக்கிறார். படங்களையும் பாடல்களையும் பற்றிய குறிப்புகளில் அவற்றைப் பற்றிய சுவாரசியமான தகவல்களும் இடம்பெற்றுள்ளன. எதிர்பாராத தருணத்தில் நினைவில் நிழலாடும் ஒரு டி.எம்.எஸ். பாடல் எந்தப் படத்தில் இடம்பெற்றது என்று அறிந்துகொள்ள வேண்டுமெனில், இந்தப் பெருந்தொகுப்பு அதற்கு உதவும். டி.எம்.எஸ். நூற்றாண்டு தொடங்கியிருக்கும் இந்நேரத்தில், அவருக்குச் செய்யப்பட்டிருக்கும் மிகச் சிறந்த அஞ்சலி இது.

- புவி

திரை இசையில் டி.எம்.சௌந்தரராஜன்
பொன்.செல்லமுத்து
மணிவாசகர் பதிப்பகம்
விலை: ரூ.750
தொடர்புக்கு:
044 25361039

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x