Published : 19 Mar 2022 06:36 AM
Last Updated : 19 Mar 2022 06:36 AM
காந்தி பற்றிய வரலாற்றுப் புனைவு நூல்கள் தமிழ் உட்படப் பல்வேறு மொழிகளில் எழுதப்பட்டுவருகின்றன. அந்த வகையில் காந்தி கொல்லப்பட்ட நிகழ்வை மையமாகக் கொண்ட நாவல் இது. இந்திய-பாகிஸ்தான் பிரிவினையை ஒட்டி இந்தியாவில் தங்கிய முஸ்லிம்களும் பாகிஸ்தான் பகுதிகளில் வாழ்ந்த இந்துக்களும் எதிர்கொண்ட கொடூர வன்முறை, காந்தியின் மதநல்லிணக்கச் செயல்பாடுகளை வெறுத்து, நாதுராம் கோட்சே குழுவினர் அவரைக் கொல்வதற்காகத் தீட்டிய சதித் திட்டங்களும் அவை செயல்படுத்தப்பட்டதும் நாவலின் முக்கியப் பேசுபொருள்களாகின்றன.
மூன்று தமிழ் இளைஞர்கள் காந்தியின் இறுதி நாட்களை நேரடியாக அருகிலிருந்து பார்த்ததுபோன்ற கற்பனையை இணைத்து, அவருடைய கொலை நிகழ்ந்த சூழலை நாவலாகப் பதிவுசெய்து, அது குறித்த கோட்பாட்டுரீதியான விவாதங்களை முன்வைத்திருக்கிறார் கன்யூட்ராஜ். இளமையில் தன்னைப் பெரிதும் பாதித்த புத்தகமாக காந்தியின் ‘சத்திய சோதனை’யை அடையாளப்படுத்தும் நாவலாசிரியர், காந்தி கொலையை ஒட்டி எழுதப்பட்ட பல்வேறு நூல்களை வாசித்து இந்த நாவலை எழுதியுள்ளார்.
- கோபால்
ஒரு மகாத்மா ஒரு கொள்கை ஒரு கொலை
கன்யூட்ராஜ்
வெளியீடு:
என்.சி.பி.ஹெச்.
விலை: ரூ.460
தொடர்புக்கு:
044-2625 1968
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT