Published : 23 Apr 2016 10:30 AM
Last Updated : 23 Apr 2016 10:30 AM

சிறந்த மொழிபெயர்ப்புகள்!

தமிழின் முக்கியமான எழுத்தாளர்கள், வாசகர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் ஆகியோரைச் சிறந்த மொழிபெயர்ப்பு நூல்களைப் பரிந்துரைக்கும்படிக் கேட்டு, அவர்களுடைய பட்டியல்களிலிருந்து இறுதிசெய்யப்பட்ட பட்டியல்கள் இங்கே கொடுக்கப்பட்டிருக்கின்றன.

உலக இலக்கியம்

* அந்நியன்-ஆல்பெர் காம்யு;

(பிரெஞ்சிலிருந்து) வெ.ஸ்ரீராம், க்ரியா பதிப்பகம்.

* அன்னா கரீனினா- டால்ஸ்டாய்;

(ஆங்கிலம் வழி) நா. தர்மராஜன், பாரதி புத்தக நிலையம்.

* கடலும் கிழவனும் - எர்னஸ்ட் ஹெமிங்வே;

(தமிழில்) ச.து.சு. யோகியார், எஸ்.எஸ். பப்ளிகேஷன்.

* கரமசோவ் சகோதரர்கள் - பியோதர் தாஸ்தாயெவ்ஸ்கி;

(ரஷ்ய மொழியிலிருந்து), அரும்பு சுப்பிரமணியம், காலச்சுவடு பதிப்பகம்.

* நம் காலத்து நாயகன்- லெர்மன்தேவ்;

(தமிழில்) பூ. சோமசுந்தரம், சந்தியா பதிப்பகம்.

* பட்டாம்பூச்சி - ஹென்றி ஷாரியர்;

(தமிழில்) ரா.கி. ரங்கராஜன், நர்மதா பதிப்பகம்.

* பாரபாஸ் (அன்பு வழி) - பேர் லாகர் குவிஸ்ட்;

(தமிழில்) க.நா.சு, மருதா பதிப்பகம்.

* போரும் வாழ்வும்- லியோ டால்ஸ்டாய்;

(தமிழில்) டி.எஸ்.சொக்கலிங்கம், என்.சி.பி.எச்.

* விசாரணை - ஃபிரன்ஸ் காஃப்கா,

(ஜெர்மன் மொழியிலிருந்து) ஏ.வி. தனுஷ்கோடி, க்ரியா பதிப்பகம்.

* வேர்கள் அலெக்ஸ் ஹேலி,

(தமிழில்) பொன்.சின்னத்தம்பி முருகேசன், எதிர் வெளியீடு.

இந்திய இலக்கியம்

* அக்னி நதி- குர் அதுலின் ஹைதர்,

(தமிழில்) சௌரிராஜன், நேஷனல் புக் டிரஸ்ட்

* அழிந்த பிறகு சிவராம காரந்த்,

(கன்னடத்திலிருந்து) டி. பி. சித்தலிங்கய்யா, நேஷனல் புக் டிரஸ்ட்.

* ஆரோக்கிய நிகேதனம் - தாராசங்கர் பந்தோபாத்யாய

- (தமிழில்) த.நா. குமாரசாமி, வ.உ.சி. பதிப்பகம்.

* சம்ஸ்காரா - யு.ஆர். அனந்தமூர்த்தி,

(கன்னடத்திலிருந்து) தி.சு. சதாசிவம், அடையாளம் பதிப்பகம்.

* சிக்கவீர ராஜேந்திரன், மாஸ்தி வெங்கடேச ஐயங்கார்,

(கன்னடத்திலிருந்து) ஹேமா ஆனந்ததீர்த்தன், நேஷனல் புக் டிரஸ்ட்.

* தர்பாரி ராகம் - ஸ்ரீலால் சுக்லா,

(இந்தியிலிருந்து) சரஸ்வதி ராம்நாத், நேஷனல் புக் டிரஸ்ட்.

* நீலகண்டப் பறவையைத் தேடி - அதீன் பந்யோபாத்யாயா,

(வங்க மொழியிலிருந்து) எஸ். கிருஷ்ணமூர்த்தி, நேஷனல் புக் டிரஸ்ட்

* பாத்தும்மாவுடைய ஆடும் இளம் பருவத்துத்தோழியும் - வைக்கம் முகமது பஷீர்,

(மலையாளத்திலிருந்து) குமாரி கெ. விஜயம், நேஷனல் புக் டிரஸ்ட்

* மண்டோவின் படைப்புகள் சதத் ஹசன் மண்டோ,

(ஆங்கிலம் வழியாக) ராமானுஜம், நிழல் வெளியீடு

* வனவாசி - விபூதி பூஷண் பந்யோபாத்யாயா,

(தமிழில்) த.நா. சேனாபதி

தத்துவம், தன்வரலாறு, அரசியல், அறிவியல், சமூகம் (இந்தியா தொடர்பானவை)

* ஆளற்ற பாலம் - கொண்டபல்லி கோடேஸ்வரம்மா;

(தெலுங்கிலிருந்து) கௌரி கிருபானந்தன், காலச்சுவடு.

* இந்தியத் தத்துவத்தில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும்- தேவிபிரசாத் சட்டோபாத்யாயா;

(தமிழில்) கரிச்சான் குஞ்சு, விடியல் பதிப்பகம்.

* இந்திய வரலாறு ஓர் அறிமுகம் - டி.டி.கோசாம்பி;

(தமிழில்) சிங்கராயர், விடியல் பதிப்பகம்.

* உப்பு வேலி ராய் மாக்ஸம்;

(தமிழில்) சிறில் அலெக்ஸ், எழுத்து பதிப்பகம்.

* ஒரு பாலியல் தொழிலாளியின் சுயசரிதை - நளினி ஜமீலா;

(மலையாளத்திலிருந்து) குளச்சல் மு. யூசுப், காலச்சுவடு.

* காந்தி வாழ்க்கை - லூயி பிஷர்;

(தமிழில்) தி.ஜ.ர, பழனியப்பா பிரதர்ஸ்

* சிதம்பர நினைவுகள் - பாலச்சந்திரன் சுள்ளிக்காடு;

(மலையாளத்திலிருந்து) கே.வி. ஷைலஜா, வம்சி பதிப்பகம்.

* சுயசரிதை - ஜவஹர்லால் நேரு;

(தமிழில்) வ.ரா, அலைகள் வெளியீட்டகம்.

* வால்காவிலிருந்து கங்கை வரை- ராகுல சாங்கிருத்யன்;

(தமிழில்) இ. முத்தையா, தமிழ் புத்தகாலயம்

* 12 உபநிடதங்கள்-

(தமிழில்) சுவாமி ஆசுதோஷானந்தர், ஸ்ரீராமகிருஷ்ண மடம்.

தத்துவம், தன்வரலாறு, அரசியல், சமூகம் (உலகம்)

* உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்- ஜான் ரீட், என்.சி.பி.எச்.

* ஒடுக்கப்பட்டவர்களுக்கான கல்வி முறை - பாவ்லோ பிரைரெ;

(தமிழில்) இரா. நடராசன், பாரதி புத்தகாலயம்.

* ஒற்றை வைக்கோல் புரட்சி - மசானபு ஃபுகோகா;

மொழிபெயர்ப்பு & வெளியீடு பூவுலகின் நண்பர்கள்.

* காதல் வரலாறு - டயன் அக்கர்மென்;

(தமிழில்) ச. சரவணன், சந்தியா பதிப்பகம்.

* சிறியதே அழகு - ஈ.எப்.ஷூமாஷர்;

(தமிழில்) யூசுப்ராஜா, எதிர் வெளியீடு.

* சேகுவேரா வாழ்வும் மரணமும் - ஜோர்ஜ் ஜி.காஸ்டநாடா; (தமிழில்) எஸ். பாலச்சந்திரன், விடியல் பதிப்பகம்.

* சோபியின் உலகம் - யொஸ்டைன் கார்டெர்;

(தமிழில்) ஆர்.சிவகுமார், காலச்சுவடு.

* ப்ளேட்டோவின் குடியரசு-

(தமிழில்) வெ. சாமிநாத சர்மா

* பீகிள் கடற் பயணம் - சார்லஸ் டார்வின்;

(தமிழில்) அப்துல் ரஹ்மான், அகல்.

* ஜராதுஷ்ட்ரா இவ்வாறு கூறினான் நீட்ஷே;

(ஆங்கிலம் வழியாக) ரவி, காலச்சுவடு பதிப்பகம்.

கவிதைகள்

* ஆமுக்த மால்யதா - கிருஷ்ண தேவராயர்,

(தெலுங்கிலிருந்து) மு. கு. ஜகந்நாத ராஜா

* கீதாஞ்சலி- ரவீந்திரநாத் தாகூர்;

(தமிழில்) வீ.ஆர்.எம். செட்டியார், முல்லை பதிப்பகம்.

* சூரியன் தகித்த நிறம் (இந்திய, உலகக் கவிதைகள்)

(தமிழில்) பிரமிள், நற்றிணை பதிப்பகம்.

* சொற்கள்- ழாக் ப்ரெவர்;

(பிரெஞ்சிலிருந்து) வெ. ஸ்ரீராம், க்ரியா பதிப்பகம்.

* பவித்ரன் தீக்குன்னி கவிதைகள்,

(மலையாளத்திலிருந்து) என்.டி. ராஜ்குமார், புது எழுத்து வெளியீடு.

தாக்கம் ஏற்படுத்திய முத்திரைப் புத்தகங்கள்

* ஒரு யோகியின் சுயசரிதை - பரமஹம்ச யோகானந்தர்;

ஜெய்கோ பதிப்பகம்

* கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை - கார்ல் மார்க்ஸ், பிரெடெரிக் எங்கெல்ஸ்;

(தமிழில்) எஸ்.வி. ராஜதுரை, என்.சி.பி.எச்.

* சத்திய சோதனை - காந்தி,

நவஜீவன் வெளியீடு.

* மகாபாரதம் (சம்ஸ்கிருதத்திலிருந்து தமிழில்)

ராமானுஜாசாரியார் தலைமையிலான மொழிபெயர்ப்புக் குழு; கும்பகோணம் பதிப்பு.

* ஜாதியை அழித்தொழிக்கும் வழி அம்பேத்கர்,

கருப்பு பிரதிகள்.

சிறார் உலகம்

* அப்பா சிறுவனாக இருந்தபோது - அலெக்சாந்தர் ரஸ்கின்;

(தமிழில்) நா. முகமது ஷெரீபு & ஈஸ்வர சந்தான மூர்த்தி, புக்ஸ் ஃபார் சில்ரன்.

* கலிவரின் பயணங்கள் - ஜோனதன் ஸ்விப்ட;

(தமிழில்) யூமா. வாசுகி, என்.சி.பி.ஹெச்.

* குட்டி இளவரசன் - அந்த்வான் து செந்த் எக்சுபெரி;

(பிரெஞ்சிலிருந்து) வெ. ஸ்ரீராம் & ச. மதனகல்யாணி, க்ரியா.

* டோட்டோ சான்: ஜன்னலில் ஒரு சிறுமி - டெட்சுகோ குரோயாநாகி;

(தமிழில்) சு. வள்ளிநாயகம் & சொ. பிரபாகரன், நேஷனல் புக் டிரஸ்ட்.

* சார்லி மற்றும் சாக்லேட் ஃபேக்டரி ரோல் தால்;

(தமிழில்) பாஸ்கர் சக்தி, விகடன் வெளியீடு.





உலக புத்தக தினத்தில் புத்தக சங்கமம்!

உலக புத்தக தினத்தன்று புத்தகக் காட்சி இல்லாமலா!

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தால் பெரியார் திடலில் நேற்று ‘சென்னை புத்தகச் சங்கமம்’ தொடங்கப்பட்டிருக்கிறது. நாளை வரை நடக்கவிருக்கும் இந்த 3 நாள் நிகழ்வு உலக புத்தக தினத்தைக் கொண்டாடுவதற்கு ஓர் அருமையான வாய்ப்பு!

ஆயிரக்கணக்கான தலைப்புகளில் ஒரே இடத்தில் புத்தகங்கள் கிடைப்பது மட்டுமல்ல, முதல்முறையாக 50% கழிவும் வழங்கப்படுகிறது என்பது வாசகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. நுழைவுக்கட்டணமும் கிடையாது!

இடம்: பெரியார் திடல், வேப்பேரி, நேரம்: காலை 11 மணி தொடங்கி இரவு 9 மணி வரை. 044- 2661 8161 / 2661 8162

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x