Published : 06 Mar 2022 07:18 AM
Last Updated : 06 Mar 2022 07:18 AM
சமீப காலத்தில் அதிகம் பேசப்படும் கல்வி சார்ந்த திட்டங்களில் ஒன்று ‘இல்லம் தேடிக் கல்வி'. இந்தத் திட்டத்தின் சார்பில் சென்னை புத்தகக்காட்சியில் தனி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.
புத்தகக்காட்சியின் மத்தியில் சட்டென்று ஈர்க்கும் வகையில் இந்த அரங்கின் வடிவமைப்பு உள்ளது. குழந்தைகளைக் கவர்வதே இந்த அரங்கின் நோக்கம். ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டத் தன்னார்வலர்கள், தங்கள் பகுதியில் செயல்படுத்திய புதிய முறைகளை இந்த அரங்கில் செயல்முறை விளக்கமாகக் குழந்தைகளுக்குச் செய்துகாட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விளையாட்டுகள், விடுகதைகள், விளையாட்டுவழிக் கணிதம், எளிய அறிவியல் பரிசோதனைகள் போன்றவற்றைக் கொண்ட செயல்முறைகளை வெவ்வேறு மாவட்டங்களிலிருந்து தினமும் வருகை தரும் தன்னார்வலர்கள் செய்துகாட்டுகிறார்கள். அரங்கில் இருக்கும் தன்னார்வலர்களின் சிரித்த முகம், பொறுமையுடன் சிறாரை அவர்கள் அணுகும் விதம் எல்லாம் கற்றல் வேட்கையைத் தூண்டுவதாக இருக்கின்றன.
தன்னார்வலர்களைக் கொண்டு செயல்படுத்தப்படும் உலகின் மிகப் பெரிய கல்வித் திட்டம் இது. தற்போது 1.75 லட்சம் தன்னார்வலர்கள் கற்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 35 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெற்றுவருகின்றனர். இந்தத் திட்டத்தின் மூலம், ஒரு நாளைக்கு 2.60 லட்சம் மணி நேரத்துக்கும் மேல் கற்பிக்கப்படுகிறது என்பது இதன் பெருமையை உணர்த்தும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT