Published : 28 Feb 2022 02:18 PM
Last Updated : 28 Feb 2022 02:18 PM
நவீனத் தமிழ் இலக்கியத்தில் நாட்டுப்புறக் கதைகளின் கூறுகள் அதிகம் இடம்பிடிக்க ஆரம்பித்தது, கி.ராஜநாராயணனின் வருகைக்குப் பிறகுதான். நாட்டுப்புறக் கதை மரபைத் தழுவி அவர் சிறுகதைகள், நாவல்கள் எழுதியது மட்டுமல்லாமல், நேரடி நாட்டுப்புறக் கதைகளையும் அவர் தொகுத்திருக்கிறார். இதற்கு முன்பு தனித்தனியாக வெவ்வேறு தலைப்புகளில் வெளிவந்த நாட்டுப்புறக் கதைகள், இப்போது ஒரே தொகுதியில் வெளிவந்திருக்கின்றன. பெரியவர்கள், குழந்தைகள் என்று அனைவருக்குமான கதைகள் இருப்பது இந்தத் தொகுப்பின் சிறப்பு.
நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம்
பதிப்பாசிரியர்கள்: கி.ராஜநாராயணன், சிலம்பு நா.செல்வராசு
அன்னம் - அகரம் வெளியீடு
விலை: ரூ.775
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT