Published : 26 Feb 2022 12:09 PM
Last Updated : 26 Feb 2022 12:09 PM

புத்தகத் திருவிழா 2022 | புத்தகக்காட்சியில் மாணவர்களுக்கான பரிசுப் போட்டி

பள்ளி, கல்லூரி மாணவர்களின் திறன்களை அங்கீகரிக்கும் விதமாக சென்னை புத்தகக் காட்சியில் மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றிபெறுவோருக்குப் பரிசுகள் வழங்கப்படவிருக்கின்றன. இதன்படி ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 27) தொடங்கி புதன்கிழமை (மார்ச் 2) வரை தினமும் காலை 9 மணிக்கு ஓவியப் போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, பேச்சுப் போட்டி ஆகியவை புத்தகக்காட்சியில் நடைபெறுகின்றன.

இப்போட்டிகளில் பங்குபெற விரும்பும் மாணவர்கள் புத்தகக்காட்சியை நடத்தும் பபாசி அமைப்பின் துணைத் தலைவர் பெ.மயிலவேலனை 9884041948 என்கிற எண்ணில் தொடர்புகொண்டு தங்களுடைய பெயர், பள்ளி/கல்லூரி, கைபேசி, மின்னஞ்சல் முகவரி ஆகிய தகவல்களைக் கொடுத்துப் பதிவு செய்துகொள்ள வேண்டும். புத்தகக்காட்சி அரங்கில் நேரில் வந்தும் பதிவுசெய்துகொள்ளலாம்.

இது தவிர, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பன்னாட்டுப் பேச்சுப் போட்டியும் நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் ‘புத்தகங்களே பெரிய ஆயுதங்கள்’, ‘வாசிப்பதால் நான் மனிதன்’, ‘தமிழ் இலக்கியங்கள் கூறும் பண்பாட்டு மானிடவியல்’ ஆகிய மூன்று தலைப்புகளில் ஏதேனும் ஒன்றில் 2 நிமிடங்கள் பேசி, அதைக் காணொளியாகப் பதிவு செய்து https://forms.gle/A2mevgUwzfRDEwSy7 என்னும் இணைப்பில் பதிவுசெய்ய வேண்டும். போட்டியில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு நீதிபதி அரங்க.மகாதேவன் பரிசும் சான்றிதழ்களும் வழங்குவார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x