Published : 19 Feb 2022 02:29 PM
Last Updated : 19 Feb 2022 02:29 PM
பள்ளியிலும் கல்லூரியிலும் சிறப்பாகப் படித்து நல்ல மதிப்பெண்களைக் குவிக்கும் மாணவர்கள் அனைவராலும் நல்ல வேலைவாய்ப்பைப் பெற முடிவதில்லை. இதற்குப் பல காரணங்கள் இருப்பினும் 21-ம் நூற்றாண்டின் திறன்கள் குறித்த புரிதல் இன்னமும் பரவலாகாதது முக்கியக் காரணமாக அறியப்படுகிறது. இந்த நூற்றாண்டுக்கெனப் புதிதாக மனித குலத்துக்கு ஆற்றல்கள் தேவைப்படுகின்றவா என்றால், நிச்சயம் ‘ஆமாம்’ என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், இது தொழிற்புரட்சி 4.0 காலம் என்றழைக்கப்படுகிறது.
19-ம் நூற்றாண்டில் தோன்றிய தொழிற்புரட்சியால் பலவிதமான இயந்திரங்களுடன் மனிதர்கள் பணியாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. அதுவே தொழிற்புரட்சி 4.0 காலமானது இயந்திர மனிதர்களான ரோபாட்டுகளுடனும் உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள மனிதர்களுடனும் கைகோத்துப் பணியாற்றும் அவசியத்தை உண்டுபண்ணியிருக்கிறது. இங்கு தொழில்நுட்பத் திறன்களுக்கு இணையாக முன்பு எப்போதும் இல்லாததைவிடவும் கூடுதலாக உளவியல் திறன்களையும் வளர்த்துக்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இது குறித்தெல்லாம் இந்த நூலில் விரிவாக விளக்கப்பட்டிருக்கிறது. சென்னை புத்தகக்காட்சியில் இந்த நூலை வாங்குவதற்கு…
சைகோமெட்ரிக் தேர்வுகள்
ஜி.எஸ்.எஸ்.
இந்து தமிழ் திசை வெளியீடு
விலை: ரூ.150
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT