Last Updated : 16 Oct, 2021 09:24 AM

 

Published : 16 Oct 2021 09:24 AM
Last Updated : 16 Oct 2021 09:24 AM

நூல்நோக்கு: கதைகளில் வாழும் கான்சாகிப்

ஐம்பதாண்டு காலப் பணியனுபவம் கொண்ட மூத்த பத்திரிகையாளரான தனசேகரன், அமுதன் என்ற புனைபெயரில் தமிழர்களின் சரித்திரச் சிறப்புகளை எளிய தமிழில் பல்லாயிரக்கணக்கான வாசகர்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்தவர். தஞ்சை பெரிய கோயில், அங்கோர்வாட், ஆதிச்சநல்லூர், கீழடி என்ற வரிசையில் அடுத்து அவர் மருதநாயகம் என்றழைக்கப்பட்ட யூசுப் கானின் வரலாற்றை எழுதியுள்ளார். ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்துக்குக் கட்டுப்பட மறுத்த கலகக்காரர் மருதநாயகத்தை ஐந்தாறு மாதங்களாய் முயன்றும் வீழ்த்த முடியாமல், வஞ்சகத்தால் அதை நிறைவேற்றிக்கொண்டனர்.

தூக்கிலிட்டும் ஆத்திரம் தீராதவர்களாய் கை வேறு கால் வேறாகத் துண்டித்து, வெவ்வேறு இடங்களில் புதைத்துப் பழிதீர்த்துக்கொண்டனர். கூலிப் படைத் தலைவனாக வாழ்க்கையைத் தொடங்கி, சுதந்திரப் போராட்ட வீரராக மரணத்தைத் தழுவிய மருதநாயகத்தின் வரலாறு, அமுதனின் வார்த்தைகளில் மீண்டும் உயிர்பெற்றுள்ளது. 17, 18-ம் நூற்றாண்டுகளின் வரலாறாகவும் அது விரிவுபெறுகிறது. வரலாற்று ஆதாரங்களைப் பின்னணியாகக் கொண்டு, சுவாரசியமான ஒரு மர்ம நாவலைப் போல எழுதப்பட்ட புத்தகம் என்று அணிந்துரையில் பாராட்டியுள்ளார் கமல் ஹாசன்.

- புவி

மருதநாயகம் என்ற மர்மநாயகம்
அமுதன்
மணிமேகலைப் பிரசுரம்
தியாகராய நகர், சென்னை-7
விலை: ரூ.300
தொடர்புக்கு: 91764 51934

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x