Last Updated : 09 Oct, 2021 06:36 AM

 

Published : 09 Oct 2021 06:36 AM
Last Updated : 09 Oct 2021 06:36 AM

வள்ளுவத்தை வாசிக்க ஒரு வழிகாட்டி

திருவள்ளுவர் திடுக்கிடுவார்
வெ.இராமலிங்கம்,
அலைகள் வெளியீட்டகம்,
இராமாபுரம், சென்னை-89
விலை: ரூ.80
தொடர்புக்கு: 9841775112

திருவள்ளுவரின் ஒவ்வொரு குறளும் தன்னளவில் முழுமையானது என்றாலும், அதன் பொருளைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால், அக்குறள் இடம்பெற்ற அதிகாரத்தின் மற்ற குறள்களையும் துணைகொள்ள வேண்டும் என்கிறார் ‘நாமக்கல் கவிஞர்’ வெ.இராமலிங்கம். ‘பெருமை’ எனும் அதிகாரத்தில் இடம்பெற்ற மற்ற குறள்களுக்குப் பரிமேலழகர் எழுதிய உரையானது, முதல் குறளுக்குப் பொருந்தாமல் நிற்பதையும் அவர் உதாரணமாகக் காட்டியுள்ளார். பரிமேலழகரின் இத்தகைய கவனக் குறைவுகளைக் கேள்விக்குட்படுத்தாது, அடுத்து வந்த உரையாசிரியர்கள் கண்ணை மூடிக்கொண்டு, அவரைப் பின்பற்றுவதைச் சுட்டிக்காட்டிக் குறளன்பர்களை எச்சரிக்கிறது இந்நூல். பொருட்பாலின் 13 அதிகாரங்கள் மட்டுமே அரசருக்கும் அமைச்சுக்கும் தொடர்புடையவை, ஏனையவை அனைவருக்கும் பொதுவானவை; இதுவும் பரிமேலழகரின் உரையில் கவனத்தில் கொள்ளப்படவில்லை என்பதை விரிவாக இந்நூலில் விளக்கியுள்ளார் வெ.இராமலிங்கம். எனவே, அதிகார வைப்புமுறையின் அடிப்படையில் குறளதிகாரங்களுக்குப் பொருள் விளக்கம் கொள்வதும் தவறாகவே முடியும். வள்ளுவரின் ‘எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும்’ என்ற வார்த்தைகளுக்கு அக்குறளுக்கு உரையெழுதிய பரிமேலழகரும் விதிவிலக்கு அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x