Last Updated : 25 Sep, 2021 06:07 AM

 

Published : 25 Sep 2021 06:07 AM
Last Updated : 25 Sep 2021 06:07 AM

வாழக் கற்றுத்தரும் அனுபவங்கள்

எண்பது வயதைக் கடந்துவிட்ட டாக்டர் கல்யாணி நித்யானந்தன் கரோனா ஊரடங்கு காலத்தில், ‘இந்து தமிழ்’ இணையதளத்தில் தன் வாழ்வனுபவங்களையும் மருத்துவப் பணி அனுபவங்களையும் முன்வைத்து எழுதிய 40 கட்டுரைகளின் தொகுப்பு இது. சென்னையில் பிறந்து, வளர்ந்து ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் பட்டம்பெற்றவர் கல்யாணி. ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் தமிழ்நாட்டின் முதல் மாரடைப்பு நோய் அவசர சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டதில் முக்கியப் பங்காற்றியவர். 20 ஆண்டுகளுக்கும் மேல் மருத்துவ இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கு உதவிப் பேராசிரியராகப் பாடம் எடுத்தவர். பணி ஓய்வுக்குப் பின் பழங்குடியின மருத்துவமனைகளில் பணியாற்றியவர். குழந்தைப் பருவம், கல்லூரிக் காலம், மருத்துவப் பணி, வெளிநாட்டுப் பயணங்கள், வாழ்வில் சந்தித்த மறக்க முடியாத மனிதர்கள். உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை எளிமையும் சுவாரசியமும் நிறைந்த மொழிநடையுடன் இந்தக் கட்டுரைகளில் விவரித்திருக்கிறார் மருத்துவர் கல்யாணி. மருத்துவத்தில் மருத்துவரின் உள்ளுணர்வுக்கு உள்ள பங்கு உள்ளிட்ட நுட்பமான சில விஷயங்கள் குறித்த புரிதலையும் பார்வையையும் அளிப்பதோடு, நம்பிக்கையும் கடமை உணர்வும் நிரம்பிய கோணத்திலிருந்து வாழ்க்கையை அணுகக் கற்றுத்தருபவையாகவும் மருத்துவர் கல்யாணியின் அனுபவக் கட்டுரைகள் அமைந்திருக்கின்றன.

சில தருணங்களும் சில நிகழ்வுகளும்
டாக்டர் கல்யாணி நித்யானந்தன்
வெளியீடு: இந்து தமிழ் திசை
விலை: ரூ.200
தொடர்புக்கு: 7401296562

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x