Last Updated : 24 Jul, 2021 04:09 AM

 

Published : 24 Jul 2021 04:09 AM
Last Updated : 24 Jul 2021 04:09 AM

நூல்நோக்கு: நினைவில் நிலைத்திருக்கும் இரண்டு பாடல்கள்

ஜே.பி.சந்திரபாபு திரையிசைப் பாடல்கள்
பொன்.செல்லமுத்து
மணிவாசகர் பதிப்பகம்
விலை: ரூ.125
தொடர்புக்கு: 044 25361039

நகைச்சுவை நடிகரும் பாடகருமான ஜே.பி.சந்திரபாபு நடித்த மொத்தப் படங்களின் எண்ணிக்கை 70. அவற்றில், தனது சொந்தக் குரலில் பாடி நடித்தது 45 படங்கள். பாடிய மொத்தப் பாடல்கள் 65 மட்டுமே. இது தவிர, 4 பாடல்களில் அவர் மற்ற நடிகர்களுக்கும், 4 பாடல்களில் அவருக்கு மற்ற பாடகர்களும் குரல்கொடுத்துள்ளனர். எழுபது திரைப்படங்களிலும் சந்திரபாபு ஏற்ற வேடங்கள், அவருடன் நடித்த நடிகர்கள் ஆகிய தகவல்களுடன் அவரது வாழ்க்கைக் குறிப்பும் இந்நூலில் இடம்பெற்றுள்ளது. தமிழ்த் திரையிசைப் பாடல்களின் வரலாற்றை வெவ்வேறு கோணங்களிலிருந்து தொகுத்து எழுதிவருபவர் பொன்.செல்லமுத்து. ‘மணிவாசகர்’ பதிப்பகத்தின் வழியாக வெளிவந்திருக்கும் அவரது 27-வது நூல் இது. ‘என்னைப் பத்திக் கவியெழுத கண்ணதாசன் இல்லையே, எனக்காகக் குரல்கொடுக்க சந்திரபாபு இல்லையே’ என்று வைரமுத்து ‘பார்த்தேன் ரசித்தேன்’ படத்துக்காக எழுதிய வரிகள் வெகு பிரபலம். ஆனால், சந்திரபாபு பாடியதில் கண்ணதாசன் எழுதியது வெறும் 12 பாடல்கள் மட்டும்தான் என்கிறது இந்தப் புத்தகம். ‘பிறக்கும்போதும் அழுகின்றாய்’, ‘புத்தியுள்ள மனிதனெல்லாம்’ இந்த இரண்டு பாடல்களைக் கேட்கும்போதெல்லாம் கண்ணதாசனும் சேர்ந்தல்லவா நினைவுக்கு வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x