Last Updated : 17 Jul, 2021 07:08 AM

 

Published : 17 Jul 2021 07:08 AM
Last Updated : 17 Jul 2021 07:08 AM

நூல்நோக்கு: ஊன்கலந்து உயிர்கலந்து...

திருவாசகத் தேனமுதம்
மா.சண்முக சுப்பிரமணியம்
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்,
சென்னை-18,
தொடர்புக்கு: 044 3241 8129
விலை:ரூ.525

சட்டத் தமிழ் முன்னோடிகளில் ஒருவரான மா.சண்முகசுப்பிரமணியம், சைவத் தமிழ் அறிஞரும்கூட. எண்பதுகளில் வெளியான அவரின் ‘திருவாசகத் தேனமுதம்’ மறுபதிப்பு கண்டுள்ளது. 81 கட்டுரைகளைக் கொண்டது இத்தொகுப்பு. திருவாசக அனுபவங்களைச் சொல்லும் நூலாசிரியர், இடையிடையே நம்மாழ்வார் திருவாய்மொழியையும் எடுத்துக்காட்டுவது இந்நூலின் சிறப்பு. ‘குறள் கூறும் சட்டநெறி’ என்ற தலைப்பில் பழந்தமிழர் வாழ்வின் நீதி முறைமையை விளக்கி, முன்னோடி நூலொன்றை எழுதியவர் மா.சண்முகசுப்பிரமணியம். திருவாசகத்தைப் பேசும்போதும் திருக்குறளை ஒப்பிட்டுக் காட்டத் தவறவில்லை. சைவத்தில் வேர்கொண்டிருந்தபோதிலும், சமயம் கடந்த இறைமைக்கே இந்நூல் முக்கியத்துவம் கொடுக்கிறது. அன்பினில் விளைந்த ஆரமுதாய் அதைக் காண்கிறது. அறிவித்தலுக்கும் உணர்வித்தலுக்குமான வேறுபாட்டை விளக்கும் முதல் அத்தியாயமே, மெய்யியலின் அடிப்படையான அளவையியலில் ஆசிரியரின் புலமைக்குச் சான்றாகி நிற்கிறது. ‘சட்டவியல்’, ‘தீங்கியல் சட்டம்’ ஆகிய தலைப்புகளில் தமிழில் சட்டவியலின் அடிப்படை நூல்கள் மட்டுமின்றி ‘ஞானச்சுடர்’, ‘பாரதியும் அறிவியலும்’ ஆகிய தலைப்புகளிலும் புத்தகங்கள் எழுதியவர் மா.சண்முகசுப்பிரமணியம். ‘திருவாசகத் தேனமுதம்’ போலவே அவரது மற்ற எழுத்துகளும் மறுபதிப்பு காணட்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x