Last Updated : 26 Dec, 2015 11:34 AM

 

Published : 26 Dec 2015 11:34 AM
Last Updated : 26 Dec 2015 11:34 AM

சோழப்பேரரசின் ராஜேந்திர சரித்திரம்

தனது தந்தை ராஜராஜனையும் விஞ்சிய பல வெற்றிகளைப் பெற்றவன் சோழப் பேரரசன் ராஜேந்திர சோழன். ராஜராஜன் காலத்தில் சோழப் பேரரசின் படையெடுப்புகளுக்குத் தலைமையேற்று வழிநடத்தியவன் ராஜேந்திர சோழனே. அவனது காலத்தில்தான் தென்னிந்தியாவிலேயே மிகப் பெரிய பேரரசாக சோழப்பேரரசு விளங்கியது.

ராஜேந்திரன் ஒன்பது லட்சம் வீரர்களைக் கொண்ட கடற்படை ஒன்றைக் கொண்டு வங்கக் கடலோடி சென்றவன். ஜாவா, சுமத்ரா, பினாங்குவரை படையெடுத்துச் சென்று வெற்றிக்கொடி நாட்டியவன். அவனது காலத்தில் சோழப் பேரரசுக்கென்று உருவாக்கப்பட்ட புதிய தலைநகரமே கங்கை கொண்ட சோழபுரம். தன்னுடைய கங்கை வெற்றிக்கு ஜயஸ்தம்பம் எடுக்க சோழ கங்கம் ஏரியை வெட்டியவன்.

ராஜராஜனுக்கு வரலாற்றில் கிடைத்திருக்கிற அங்கீகாரம்போல் ராஜேந்திரனுக்குக் கிடைக்கவில்லை. அந்தக் குறையைப் போக்கும் விதமாக ராஜேந்திர சோழனின் பெருமையைத் தொகுத்துச் சொல்கிறது இந்நூல்.

தமிழ்ப்பேரரசன் ராஜேந்திரன்
வெ.நீலகண்டன்
விலை : ரூ.150/-
வெளியீடு: சூரியன் பதிப்பகம், சென்னை 600 004.
தொடர்புக்கு : 72990 27361.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x