Published : 07 Nov 2015 01:19 PM
Last Updated : 07 Nov 2015 01:19 PM
‘நிறப்பிரிகை’ ஆசிரியராக அறிமுகமான ரவிக்குமாரின் ‘கண்காணிப்பின் அரசியல்’ நூல் அவரை நல்ல சிந்தனை யாளராய் அடையாளம் காட்டியது.
அவர் நடத்திய ‘தலித்’ சிற்றிதழ் இலக்கிய நுண்ணுணர்வும் கூர்மையான அரசியலும் கொண்ட படைப்புகள் மற்றும் கட்டுரைக ளோடு வெளிவந்த தமிழின் சிறந்த சிற்றிதழ்களில் ஒன்றாகும். ரவிக்குமாரின் படைப்புலகத்தை மதிப்பிடும் வண்ணம் இப்புத்தகம் வெளியாகியுள்ளது. அரசிய லாளர் தொல். திருமாவளவன் முதல் இளம் படைப்பாளி லக்ஷ்மி சரவணகுமார் வரை ரவிக்குமாரின் எழுத்துகளை மதிப்பிட்டுள்ளனர். புத்தகத்தை மணற்கேணி பதிப்பகம் அழகுற வெளியிட்டுள்ளது.
நடுக்கடல் தனிக்கப்பல்
ரவிக்குமார் படைப்புலகம்
வெளியீடு: மணற்கேணி பதிப்பகம்,
முதல் தளம், புதிய எண்:10, பழைய எண்: 288, டாக்டர் நடேசன் சாலை,
திருவல்லிக்கேணி, சென்னை.05
தொடர்புக்கு: 9443033305
விலை: ரூ. 200/-
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT