Published : 06 Mar 2021 06:45 AM
Last Updated : 06 Mar 2021 06:45 AM

கவனிக்க வேண்டிய 5 புத்தகங்கள்

இராசேந்திரசோழன்: தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
தொகுப்பு: பா.இரவிக்குமார், புதுவை சீனு.தமிழ்மணி
டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடு
விலை: ரூ.300
87545 07070

பேரருவி
கலாப்ரியா
சந்தியா பதிப்பகம்
விலை: ரூ.270
044 2489 6979

ஓலம்
சரண்குமார் லிம்பாலே, தமிழில்: ம.மதிவண்ணன்
கருப்புப் பிரதிகள் வெளியீடு
விலை: ரூ.240
94442 72500

பெருங்காமநல்லூர் போராட்டம்
நூற்றாண்டு நினைவுகள்
தொகுப்பு: அ.கா.அழகர்சாமி, அ.செல்வப்பிரீத்தா
கருத்து = பட்டறை வெளியீடு
விலை: ரூ.220
98422 65884

கையறு
கோ.புண்ணியவான்
விற்பனை உரிமை: பி பார் புக்ஸ்
விலை: ரூ.400
90424 61472

******************

ஆஹா

தே: ஒரு இலையின் வரலாறு
ராய் மாக்ஸம், தமிழில்: சிறில் அலெக்ஸ்

இந்தியா அடிமைப்படுத்தப்பட்ட வரலாறு
தமிழில்: பி.ஆர்.மகாதேவன்
மொத்த விலை: ரூ.650
கிழக்கு வெளியீடு - 044 4200 9603

தமிழ் வாசகர்களுக்கு ‘உப்பு வேலி’ மொழிபெயர்ப்பு நூல் மூலம் ஏற்கெனவே அறிமுகமானவர் ராய் மாக்ஸம். இந்த இரண்டு புத்தகங்களுக்கும் ‘உப்பு வேலி’க்கும் தொடர்பு இருக்கிறது. எந்த வழியிலெல்லாம் இந்தியா காலனியப்படுத்தப்பட்டது என்பதை சுவாரஸ்யமான நடையில் கூறுபவை இந்தப் புத்தகங்கள். இந்திய வரலாற்றில் தேயிலைக்கு உள்ள முக்கியமான இடத்தை ஒரு புத்தகம் சொல்கிறதென்றால் இன்னொரு புத்தகம் ஐரோப்பிய ஆக்கிரமிப்புகளைப் பற்றிய கச்சிதமான அறிமுகத்தைத் தருகிறது. அவசியம் வாசிக்க வேண்டிய நூல்கள்.

---------------------------

உங்களிடம் இருக்கிறதா இந்தப் புத்தகம்?

சித்ரசூத்ரம்
தமிழில்: அரவக்கோன்
அனன்யா வெளியீடு
விலை: ரூ.140
94423 46504

இந்தியாவின் ஓவிய மரபுகளுக்குப் பின்னால் உள்ள கோட்பாடுகள், இலக்கணங்களைத் தெரிந்துகொள்ள உதவும் பண்டைய ஓவியக் கலைக்களஞ்சியம் ‘சித்ரசூத்ரம்’. சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட விஷ்ணுதர்மோத்தர புராணத்தின் ஒரு பகுதியாக இருந்த இந்த நூலை 1924-ம் ஆண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உலகம் முழுக்கப் பிரபலப்படுத்தியவர் கலை வரலாற்றறிஞர் ஸ்டெல்லா கிராம்ரிஷ். ஆங்கிலத்திலிருந்து மாதிரி ஓவியங்களுடன் தமிழில் இந்த நூலை அரவக்கோன் மொழிபெயர்த்திருக்கிறார். இந்தியக் கலைமரபின் வீச்சை தமிழில் அறிவதற்கு உதவிகரமான நூல் இது.

**************************

பளிச்!

ஒரு நல்ல வறட்சியை எல்லோரும் நேசிக்கிறார்கள்
பி.சாய்நாத்
தமிழில்: ஆர்.செம்மலர்
பாரதி புத்தகாலயம் வெளியீடு
விலை: ரூ.550
044 2433 2424

இந்தியாவில் கிராமப்புறச் செய்திகளின் முக்கியத்துவத்தை உணர்த்தி அவற்றுக்குத் தனிக் கவனத்தை உருவாக்கிய மூத்த பத்திரிகையாளர் பி.சாய்நாத்தின் பிரபலமான புத்தகம் இது. விவசாயிகளின் பிரச்சினைகள், கிராமப்புறங்களில் நிலவும் கல்வி, சுகாதாரச் சிக்கல்கள், அரசு நடைமுறைப்படுத்தும் திட்டங்களின் தோல்விக்குக் காரணங்களை விரிவான ஆய்வுக்கு உட்படுத்தும் கட்டுரைகளின் தொகுப்பு இது. வறட்சிக்குப் பெயர்போன ராமநாதபுரம் மாவட்டத்தில் பனையேறும் தொழிலாளர்களின் பரிதாபகரமான வாழ்க்கை, இடைத்தரகர்களால் விவசாயிகளின் வருமான இழப்பு, சாராயம் காய்ச்சுபவர்களின் ஒரு நாள் வாழ்க்கை ஆகியவற்றுடன் புதுக்கோட்டையிலிருந்து தஞ்சைக்குப் புலம்பெயரும் விவசாயத் தொழிலாளர்களைக் குறித்த உயிரோட்டமான சித்திரங்கள் இந்தத் தொகுப்பில் அடங்கியுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x