Published : 26 Dec 2020 08:14 AM
Last Updated : 26 Dec 2020 08:14 AM
உபகரணங்கள் எளிதில் கிட்டுவதால், எல்லோருக்கும் எல்லாவற்றையும் செய்யும் சாத்தியம் உண்டு. எல்லோராலும் செய்யப்படுவதால் அது மலினமானதும் அல்ல. அவரவர்களின் மனநிறைவே அவர்களின் படைப்பின் தன்மையாக இருக்கும். அதேபோல, அடையாளப்படுத்துதல், உணரச்செய்தல் என்ற இரு நிலைகளை எடுத்துக்கொண்டால் உணரச்செய்யும் படைப்புகளே மனதில் நிற்பதாகத் தோன்றுவதுண்டு. சூரியனையும் நிலவையும் வரைவது எளிது. ஆனால், நிலவின் குளிர்ச்சியையும், சூரியனின் தகிப்பையும் நமக்குள் கடத்தப்படுதல் வேண்டும். தான் நம்பும் கலை மீது அதீதப் பிரியம் கொண்டவர்களால் மட்டுமே அதை வெளிப்படுத்த முடியும். அவர்களிடம்தான் செய்நேர்த்தியும் கச்சிதத்தன்மையும் இருக்கும். அப்படிப்பட்ட கச்சிதங்களின் அழகு கொண்டவை கதிர்பாரதியின் கவிதைகள். அவருடைய சமீபத்திய தொகுப்பான ‘உயர்திணைப் பறவை’யிலும் அதை உணரலாம்.
உயர்திணைப் பறவை
கதிர்பாரதி
இன்சொல் வெளியீடு
தியாகராய நகர்,
சென்னை-17.
தொடர்புக்கு:
63822 40354
விலை: ரூ.260
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT