Published : 21 Nov 2020 10:04 AM
Last Updated : 21 Nov 2020 10:04 AM

கமல் பரிந்துரைகள்

கமல் பரிந்துரைகள்

கோடிக்கணக்கானவர்கள் பார்க்கும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் வழியாக வாரந்தோறும் புத்தகங்களை அறிமுகப்படுத்தும் ஒரு சிறப்பான காரியத்தைச் செய்துவருகிறார் கமல்ஹாசன். ஆல்பெர் காம்யுவின் ‘கொள்ளைநோய்’, மண்ட்டோவின் ‘அவமானம்’, ஜெயமோகனின் ‘வெண்முரசு’, ப.சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி’, தொ.பரமசிவனின் ‘அழகர் கோயில்’, மிகெய்ல் நைமியின் ‘மிர்தாதின் புத்தகம்’ என்று இதுவரை கமல்ஹாசன் அறிமுகப்படுத்தியிருக்கும் ஒவ்வொரு புத்தகமுமே மதிப்பு மிக்கவை. ஒரு வெகுஜன ஊடக நிகழ்ச்சியின் சிறு பகுதியாக இருக்கும் இப்படியான அற்புதங்கள் பிரதானமானதாக மாறும் சூழல் உருவாக வேண்டும்! இந்த நிகழ்ச்சியின் மூல உள்ளடக்கத்துக்குப் பரிகாரமாக இதைச் சொல்லலாமா?

இரண்டு சிறப்பிதழ்கள்

‘தமிழினி, ‘கனலி’ இரண்டு இணைய இதழ்களும் இலக்கிய வாசகர்களுக்கு விருந்து படைத்திருக்கின்றன. ரஷ்ய இலக்கியத்தின் மிகப் பெரும் ஆளுமைகளுள் ஒருவரான லியோ டால்ஸ்டாயின் நினைவு தினத்தையொட்டி சிறப்பிதழைக் கொண்டுவந்திருக்கிறது ‘தமிழினி’ (https://tamizhini.in/). இது ‘தமிழினி’யின் 25-வது இதழ் என்பது கூடுதல் சிறப்பு. போலவே, ‘கனலி’ (http://kanali.in/) இணைய தளமும் இம்மாதத் தொடக்கத்தில் ஜப்பானியச் சிறப்பிதழைக் கொண்டுவந்து அசத்தியது. ஏற்கெனவே இதற்கு முன்பு தி.ஜானகிராமன் நூற்றாண்டுக்காக ‘கனலி’ கொண்டுவந்த சிறப்பிதழ் கவனம் ஈர்த்தது குறிப்பிடத் தக்கது!

நாகர்கோவில், மதுரை, திண்டுக்கல்லில், புத்தகக்காட்சி

நாகர்கோவில்: மக்கள் வாசிப்பு இயக்கம் நடத்தும் புத்தகக்காட்சியானது வருவாய்த் துறை அலுவலர் சங்கக் கட்டிடத்தில் நவம்பர் 26 வரை நடக்கிறது. அனைத்து நூல்களுக்கும் 10% தள்ளுபடி உண்டு. தொடர்புக்கு: 88257 55682

மதுரை: என்பிடி மற்றும் என்சிபிஹெச் நிறுவனம் இணைந்து நடத்தும் புத்தகக்காட்சி மேலக்கோபுரத் தெருவிலுள்ள என்சிபிஹெச் நிறுவனத்தில் ஜனவரி 14 வரை நடக்கிறது. 10% தள்ளுபடி உண்டு.

திண்டுக்கல்: மீனாட்சி புக் ஹவுஸ் நடத்தும் புத்தகக்காட்சியானது திருவள்ளுவர் சாலையிலுள்ள பழைய தேனா வங்கிக் கட்டிடத்தில் டிசம்பர் 6 வரை நடக்கிறது. 10% தள்ளுபடி உண்டு. தொடர்புக்கு: 94432 62763

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x