Published : 17 Oct 2020 07:24 AM
Last Updated : 17 Oct 2020 07:24 AM
அசைந்தபடியே இருக்கிறது தூண்டில்
இரா.மதிபாலா
தேநீர் பதிப்பகம்
ஜோலார்பேட்டை-635851
தொடர்புக்கு:
90809 09600
விலை: ரூ.80
தமிழ்நாடு சட்டமன்றத்தில் சார்பு செயலாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றிருக்கும் மதிபாலா, தலைமைச் செயலக ஊழியர்கள் முன்னெடுத்த கலை இலக்கிய விழாக்களின் காரணகர்த்தாக்களில் ஒருவர். அலுவல் பணிகளுக்கு இடையிலும் தனக்குள் இருந்த கவிஞனைக் காப்பாற்றி வைத்திருந்தவர், ஓய்வுக் காலத்தை எழுத்துப் பணிக்காக ஒதுக்கியிருக்கிறார். முதல் தொகுப்பு வெளிவந்து இருபது ஆண்டுகளுக்குப் பின்பு, கடந்த ஆண்டில் ‘84 கவிதைகள்’ என்ற தலைப்பில் அவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பு வெளிவந்தது. இந்த மூன்றாவது தொகுப்பில் உள்ள கவிதைகள் ‘கணையாழி’, ‘மணல் வீடு’ முதலான இலக்கிய இதழ்களிலும் ‘காமதேனு’ வார இதழிலும் வெளியானவை. நேரடியாக வெளிப்படுத்த முடியாத உள்மன உணர்வுகளைப் பொதுவில் பகிர்ந்துகொள்ள கவிதைதான் காலாகாலத்துக்குமான ஊடகம் என்பதை நிரூபிக்கிறது இந்தத் தொகுப்பு. இறந்துபோன அப்பாவை அவரது காதலியிடம் கண்டுகொள்ளும் ‘அப்பாவின் முகம்’ கவிதையைக் காட்டிலும் சிறுகதைக்குத் தோதான கதைமுடிச்சு. தனிமையின் ஏக்கங்களும் பிழைப்பைக் குறித்த சுய எரிச்சலும், மனக்கட்டுக்குள் அடங்காது திமிறும் பெருங்காதலும் தொகுப்பெங்கும் விரவிக்கிடக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT