Published : 19 Sep 2020 08:42 AM
Last Updated : 19 Sep 2020 08:42 AM
தபுதாராவின் புன்னகை
தாமரைபாரதி
கடற்காகம் வெளியீடு
எஸ்.ஆலங்குளம்,
மதுரை-625017
விலை: ரூ.100
தொடர்புக்கு: 78716 78748
கவிஞர்களின் படைப்பியக்கத்தில் அவ்வப்போது ஓர் இடைவெளி அவசியமானதாக இருக்கிறது. இந்த உறக்கமற்ற தியானத்துக்குப் பிறகு வெளிவரும் கவிதைகள் தனி சோபையுடன் மிளிர்வது இயல்பு. சில சமயங்களில் இந்த இடைவெளி புறக் காரணிகளாலும் தீர்மானிக்கப்படுவது உண்டு. தொண்ணூறுகளில் ‘சல்லிகை’ இலக்கிய வட்டத்தை ஒருங்கிணைத்தவர்களில் ஒருவரான தாமரைபாரதி சற்றே நீண்ட இடைவெளிக்குப் பிறகு கவிதைக்குள் மறுபிரவேசம் செய்திருக்கிறார். ‘சதுக்கப்பூதம்’, ‘புதுஎழுத்து’, ‘காலச்சுவடு’ உள்ளிட்ட இலக்கிய இதழ்களிலும், ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டிலும் வெளியான கவிதைகளின் தொகுப்பு இது. இயற்கையின் ஒவ்வொரு அசைவிலும் ஒளிரும் உயிர்க் காதலை, தன்மையும் முன்னிலையுமாய் எடுத்துச்சொல்ல முயல்கின்றன இந்தக் கவிதைகள். நவீன வாழ்க்கையின் முரண்களையும் அபத்தங்களையும் சொல்வதோடு, இயற்கையோடு இயைந்த வாழ்வுக்கான ஏக்கத்தையும் கிளர்த்துகின்றன. ஏதோவொரு தருணத்தில் கணநேரம் தோன்றி மறையும் எண்ணத்தைக் கவிதைக்குள் சிறைப்பிடிக்கும் வித்தை தாமரைபாரதிக்கு இயல்பாகவே கைவந்திருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT