Published : 12 Sep 2020 07:59 AM
Last Updated : 12 Sep 2020 07:59 AM
அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தங்களது காலனி நாடான இந்தியாவிலிருந்து கனிமங்கள், மரங்கள் போன்ற வள ஆதாரங்களைத் தங்கள் நாட்டுக்குக் கொண்டுசெல்வதற்காக அறிமுகப்படுத்தியதுதான் ரயில்வே. இதை உருவாக்குவதற்கான அனுமதியைத் தனியாருக்குக் கொடுத்தபோது, அவர்களின் முதலீட்டுக்கான வட்டியை பிரிட்டிஷ் அரசு ஆண்டுதோறும் வழங்கவும் முன்வந்தது. சரக்கு ரயில்களைத் தொடர்ந்து பயணிகள் ரயில் சேவை அன்று நிலவிவந்த சாதியப் பாகுபாட்டின் மீது தாக்குதல் தொடுப்பதாக, நாட்டின் பல்வேறு பகுதிகளையும் ஒன்றிணைப்பதாக மாறியது. ரயில்வே நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களைக் கசக்கிப் பிழிய முற்பட்டபோது, அவர்கள் எதிர்ப்புக் குரல் எழுப்பினார்கள். அத்தோடு மட்டுமின்றி விடுதலைப் போராட்டத்தின் ஒரு பகுதியாக ரயில்வே ஊழியர்களும் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான போராட்டங்களை கையிலெடுத்து அதை மேலும் வலுவானதாக ஆக்கினர். இதன் விளைவாக, எண்ணற்ற ஊழியர்கள் பழிவாங்கப்பட்டனர். இந்த ஊழியர்களின் நீண்ட போராட்ட வரலாற்றை நிருசிங்க சக்ரவர்த்தி இந்த நூலின் மூலம் ஆவணப்படுத்தியுள்ளார். ரயில்வே துறையை மீண்டும் தனியாரின் கைகளில் ஒப்படைக்க முயற்சிகள் நடைபெற்றுவரும் பின்னணியில், ரயில்வே துறையின் இன்றைய வளர்ச்சிக்கு அந்த ஊழியர்களின் பங்களிப்பை நமக்கு மீண்டும் நினைவூட்டுவதாக இந்த நூல் அமைகிறது.
ஹிஸ்டரி ஆஃப் ரயில்வே ட்ரேட் யூனியன் மூவ்மென்ட் & தி க்ரேட் ரயில்வே ஸ்ட்ரைக் அண்ட் ஆஃப்டர்
நிருசிங்க சக்ரவர்த்தி
சிஐடியு வெளியீடு
புதுடெல்லி-110002.
விலை: ரூ.120
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT