Last Updated : 07 May, 2014 10:00 AM

 

Published : 07 May 2014 10:00 AM
Last Updated : 07 May 2014 10:00 AM

பறவைகளாக்கும் கவிதைகள்

பழநிபாரதியின் கவிதைகளும் பாடல்களும் தமிழ் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவை. உன் மீதமர்ந்த பறவை என்னும் அவரது இந்தத் தொகுப்பில் இயற்கையும் காதலும் இயற்கை மீதான காதலும் வாஞ்சையுடன் வெளிப்பட்டு கவிதை அனுபவத்தை அர்த்தப்படுத்துகின்றன.

மென்மையான உணர்வு களைச் சொற்களின் வார்ப்பி லிட்டுக் கவிதைகளாய்க் கவனப்படுத்தியுள்ளார் பழநி பாரதி. ஏ.பி. ஸ்ரீதரின் ஓவியங் களும் பழநிபாரதியின் கவிதை களும் கொண்ட இந்தத் தொகுப்பு மெல்லிய காதலை விரும்புபவர்களுக்கும் இயற்கை நேசர்களுக்கும் விருந்தளிப்பவை.

இளம் வெயில், கூந்தல், கூழாங்கற்கள். மழைக் காற்று உள்ளிட்ட பல சொற்களின் வாசனையால் மணக்கிறது இந்தத் தொகுப்பு. கல்லூரிக் காதலர்களிடையே பரிமாறப்படும் மௌனங் களை மொழியாய் மாற்றிக் கவிதைகளாய்க் கடத்தி யுள்ளார் பழநிபாரதி.

பறவைகளான கதை என்னும் கவிதை காதல் வயப்பட்ட ஆணும் பெண்ணும் இயற்கையோடு இயற்கை யாகக் கலந்துவிட்ட அழகைச் சொல்லாமல் சொல்கிறது. அந்தக் கவிதையில் புறாவைப் போல காதலும் உள்ளொழிந்து வேடிக்கை காட்டுகிறது. ஒன்றையொன்று பின்னி விளையாடும் நெற்கதிர் களைக் காதலர்களின் விளை யாட்டுக்கு உவமையாக் கியுள்ளார் அந்தக் கவிதையில் பழநிபாரதி.

கவிதை நூலுக்கான முன்னுரையை வழங்கி யுள்ளார் அ. முத்துலிங்கம். பழநி பாரதியின் திரைப்படப் பாடல் வரிகளைச் சிலாகித்துள்ள முத்துலிங்கம், எமிலி டிக்கின்ஸன், அன்னா அக்மாட்டோவோ ஆகிய கவிஞர்களின் கவிதைகளுடன் பழநிபாரதியின் கவிதைகளை ஒப்பிட்டு எழுதியுள்ளார்.

பழநிபாரதி தன் கவிதைகளில் கையாண்டுள்ள உவமைகள் சங்க இலக்கியத்தில் காணப்படும் உவமைகளைப் போல பிரமிப்பூட்டுகின்றன என்கிறார் முத்துலிங்கம்.



உன் மீதமர்ந்த பறவை

பழநிபாரதி

குமரன் பதிப்பகம்,

19, கண்ணதாசன் சாலை,

தி.நகர், சென்னை-17,

தொலைபேசி: 044-24312559,

விலை ரூ. 60

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x