Last Updated : 26 Apr, 2020 07:25 AM

 

Published : 26 Apr 2020 07:25 AM
Last Updated : 26 Apr 2020 07:25 AM

வீட்டுக்கே வரும் நாடகங்கள்!

பாடிய வாயும் ஆடிய கால் களும் சும்மா இருக்காது என்பார்கள். எத்தகைய வருத்தம் இருந்தாலும் மக்களைமகிழ்விப்பதற்கு எந்த நிலையிலும் தங்களை அர்ப்பணிப்போடு ஈடுபடுத்திக் கொள்பவர் கள் கலைஞர்கள். நடிகர் அமிதாப் பச்சன் ஊரடங்கின்போது வீட்டில் இருப்பதன் அவசியத்தை வலி யுறுத்தி ஒரு வீடியோவை வெளியிட்டார். அது மிகவும் பிரபலமானதைத் தொடர்ந்து, இளங்கோ குமணன், கார்த்திக் கௌரிசங்கர்,சூரஜ்ராஜா ஆகியோரின் முன்முயற்சியில் நாடகக் கலைஞர்களை ஒருங்கிணைத்து `தி டிராமா’ என்னும் பெயரிலேயே முதல் வீடியோ வடிவ நாடகத்தை சமூக வலைதளங்களில் வெளி யிட்டனர்.

இந்த யோசனையை முன்னெடுத்த மூவரில் ஒருவரான இளங்கோ குமணன் இதுகுறித்து கூறும்போது, “இந்த ஊரடங்கு காலத்தில் வெளியே எங்கும் செல்லமுடியாத சமயத்தில் ரசிகர்களை நாடி எங்களின் நாடகக் கலை செல்ல வேண்டும் என்று நினைத்தோம். அதற்கான சிறு முயற்சியாகத்தான் சமூக வலைதளங்களில் எங்களின் நாடகங்களை வெளியிட்டோம்” என்றார்

எளிமையாகவும் நேர்த்தியாகவும் 3 நாடகங்களை சமூக வலைதளங்களில் இதுவரை பதிவேற்றி உள்ளனர். ‘தி டிராமா’ என்னும் நாடகத்தில் பிரபல நாடகக் கலைஞர்களான ஒய்.ஜி.மகேந்திரா, வரதராஜன், ஆனந்தி உள்ளிட்ட பலர் நாடகத்துக்காக வீட்டிலிருந்து எப்படி கிளம்புவார்கள், அந்தக் காட்சிகள் எப்படி இருக்கும் என்பதே சுவாரஸ்யமான கதையாகியிருக்கிறது. இறுதியாக காத்தாடி ராமமூர்த்தி, ஊரடங்கின்போது வீட்டிலிருப்பதன் அவசி யத்தை சொல்வார்.

இரண்டாவது நாடக வீடியோ வில் எஸ்.வீ.சேகர், மதுவந்தி தொடங்கி பல பிரபல நாடக நடிகர்களும் ஒரு சிங்க ராஜா கதையை சொல்கின்றனர். இந்தக் கதை பெரியவர்களுக்கு மட்டும் அல்ல, சிறுவர்களும் ரசிக்கும் வகையில் இருப்பது சிறப்பு.

மூன்றாவது நாடகம் – லாக் டவுன். ஒரு தொலைக்காட்சியின் நிகழ்ச்சி போல் விரியும் இந்தநாடகம், முதியவர்கள் இந்தஊரடங்கை எப்படி எதிர்கொள் கிறார்கள் என்பதை விளக்கு கிறது.

மெழுகுவத்தி ஒளியில் ‘இருள்’

நான்காவதாக `இருள்’ என் னும் நாடக வீடியோ சமூக வலைதளத்தில் நேற்று வெளி யானது.

இந்த நாடகத்தில், காத்தாடி ராமமூர்த்தி, ஒய்.ஜி.மகேந்திரன், கிரேஸி மாது பாலாஜி, டி.வி.வரதராஜன் உள்ளி்ட்ட பலரும்மிகவும் நேர்த்தியாக தங்களதுபங்களிப்பை அளித்துள்ளனர்.

‘இருள்’ நாடகத்தின் மூன்றுநிமிட வீடியோ, ஒரே ஷாட்டில் மெழுகுவத்தி ஒளியில் செல் போன் மூலம் மட்டுமே எடுக்கப்பட்டது. பொழுதுபோக்கைத் தாண்டி, கலைக்கு நிறைய பொறுப்புகள் உண்டு. அதைஉணர்த்துவதற்கான வெளிப் பாடே எங்களின் இந்த சிறியமுயற்சி என்கின்றனர் இளங்கோ குமணன், கார்த்திக் கௌரிசங்கர் மற்றும் சூரஜ்ராஜா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x