Published : 01 Mar 2020 10:50 AM
Last Updated : 01 Mar 2020 10:50 AM

அமெரிக்க நூலகங்களை நாமும் பின்பற்றலாமே?

பொது நூலகங்களில் உறுப்பினராக இருக்கும் வாசகர்கள் நூல்களை உரிய காலத்தில் திருப்பிக்கொடுக்காமல் அபராதக் கட்டணம் செலுத்துவது வழக்கமான ஒன்றுதான்.

சில நேரங்களில் தாமதம் ரொம்பவே நீண்டு அபராதக் கட்டணம் புத்தகத்தின் விலையைக்காட்டிலும் கூடுதலாகிவிடுவதும் உண்டு. அதிகத் தொகையை அபராதமாகச் செலுத்தி மீண்டும் வேறு புத்தகங்களை இரவல் பெற பெரும்பாலான வாசகர்கள் விரும்புவதில்லை. அப்படி நூலகம் திரும்பாத புத்தகங்களை மற்ற வாசகர்கள் படிக்க முடியாமல் போய்விடுகிறது.

அனைத்து வாசகர்களும் பயனடையும் வகையில் நூலகப் புத்தகங்களைத் திரும்ப வாங்க வேண்டும் என்று முடிவெடுத்த சிகாகோ பொது நூலகம், கடந்த ஆண்டு அக்டோபரில் தாமதங்களுக்கான அபராதங்களை நீக்கியது; மீண்டும் வாசிப்பதற்கு ஏற்றவாறு சேதமடையாமல் இருக்கும் புத்தகங்களைத் திரும்பவும் வாங்கிக்கொண்டது. இந்த முயற்சிக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து பிலடெல்பியா, லாஸ் ஏஞ்செல்ஸ், டென்வர், சாண்டியாகோ மாநகர நூலகங்களிலும் இது நடைமுறைக்கு வந்திருக்கிறது. பொது நூலகங்களுக்கு வருகை தருவோரின் எண்ணிக்கையை உயர்த்துவதற்காக அமெரிக்க நூலகங்களில் இரவு திரைக்காட்சிகள், குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள், வேலைவாய்ப்புப் பயிற்சிகள், இலக்கியக் கூடுகைகள் ஆகியவற்றுக்கும் அனுமதிக்கப்பட்டுவருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x