Last Updated : 12 May, 2015 10:35 AM

 

Published : 12 May 2015 10:35 AM
Last Updated : 12 May 2015 10:35 AM

மனுசங்க.. 2: சீனி நாயக்கர்!

எங்கள் வீட்டுக்கும் சீனி நாயக்கர் வீட்டுக்கும் நடுவில் ஒரு தெருதான் இருந்தது.

எனது பாட்டியை வந்து நாச்சி யாள் பார்த்துச் சொல்லிக் கண்ணீர் விட்டாள். எந்தக் கண்ணீரும் நாயக்கரை அசைக்கவே இல்லை. தீர்மானமாக இருந்தார்.

கல்யாணமாகி நாச்சியாள் புறப்படும்போது, தாய் மாமனான சீனி நாயக்கர் காலில் விழுந்து அழுத அழுகையை ஊர்ப் பெண் கள் ரொம்ப நாள் சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.

நாச்சியாள் போனது அந்த வீட்டின் லட்சுமியே போய்விட்ட தாகச் சொன்னார்கள். நாயக்கர் வாள் சுயேச்சை மனுசன் ஆனார். பிட்டியில் வெயில் தாக்கும் வரை தூங்கி எழுந்தார். எழுந்ததும் பால்விடாத கருப்பட்டிக் காப்பி போட்டுக் குடிப்பார். மீதியை மூடி வைத்துக் கொள்வார். துட்டுப் புழக்கம் இருந்தால் கடையில் இட்லி வாங்கித் தின்பார். குதிரைவாலி அரிசி போட்டு சமைப்பார். ரசம் வைத்துக் கொள்வார். பட்டினி இருந்து பழகிக் கொண்டார். யார் சாப்பிடக் கூப்பிட்டாலும் போக மாட்டார். கடுங்காபி குடிக்கிறது, பேப்பர் படிக்கிறது. இதுவே ராப்தா ஆகிவிட்டது அவருக்கு.

என்னைப் போல் நெருக்கமான வர்கள் எது கொடுத்தாலும் வாங்கிக் கொள்ளுவார். எங்கள் புதுவீடு இப்படியான மனுசர்களுக்கு ஒரு தரப்பு. நினைக்கும்போது வரலாம், பத்திரிகைகள் புத்தகங்கள் படிக் கலாம், அப்படியே துண்டு விரிக் காமல் படுத்து அசரலாம், விழுந்து விழுந்து அரசியல் அலசலாம்.

தனியாக அவர் இருக்கும்போது விசிலில் ராக ஆலாபனை பண்ணு வார். நல்ல இசை ஞானம் அவருக்கு.

ஊர்ஊராக அரசியல் கூட்டங் கள் கேட்கப் போவதற்கு முன் னால், எங்கே நாதஸ்வரக் கச்சேரி நடந்தாலும் தவறாமல் போய் ஊட்கார்ந்து கேட்பதையே வழக்க மாகக் கொண்டிருந்தார்.

சீனி நாயக்கரின் வீட்டுக்குப் பக்கத்து வீடுதான் காருகுறிச்சி அருணாசலம் பொண்ணு எடுத்த வீடு. அந்த மண்கூரை வீட்டில் சதா சங்கீதம் கேட்ட வண்ணம் இருக்கும். அவருடைய வீட்டைத் தாண்டித்தான் காருகுறிச்சியார் எனது புதுவீட்டுக்கு வரணும். காருகுறிச்சியார் எங்களிடம் பேசு வதைக் காட்டிலும், ராகங்களை முனகுவதுதான் அதிகம். அதைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம். இப்படி இசையைக் கேட்டுக் கேட்டுத்தான் எங்களுக்கும் ராக ஞானம் உண்டானது.

காலம் ஒரும்பு ஆகிவிட்டதால் பஞ்சம் நிழலாட ஆரம்பித்துவிட்டது. மக்களுக்கு யார் பேரிலும், எதன் பேரிலும் கோபமோ, ‘வருத்தமோ இல்லை. நமக்கு நேரம் சரியில்லை. நம்ம கிரகசாரம், விதி என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள்.

அரசியல் பேச அப்போது ஒரே கட்சிதான் இருந்தது. அவர் கள் சொன்னதெல்லாம் ‘வெள்ளை யன் போய்விட்டால் எல்லாம் சரியாகிவிடும்; தேனும் பாலும் தெருவழி ஓடும்; அள்ளி அள்ளிப் பருகலாம்’ என்பதுதான்.

இந்த சமயத்தில்தான் புதிய குரல் ஒன்று கேட்க ஆரம்பித்தது அரசியல் வானத்தில். பளீர் பளீர் என்று கண்கள் கூசும்படியாக மின்னல் வெட்டியது. தட தடா என்று இடி முழங்கியது. பூமி அதிர்ந்தது. மக்களே எழுவீர் என்று கூட்டுக் குரலில் பாடியது.

- வருவாங்க...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x