Published : 16 May 2015 09:31 AM
Last Updated : 16 May 2015 09:31 AM
சிறை அனுபவங்களைக் கருப் பொருளாகக் கொண்டு எழுதப்படும் நூல்கள், அதிகம் பதிவுசெய்யப்படாத ஒரு வாழ்க்கையைப் பற்றிப் பேசுபவை. அத்தகைய நூல்களில் ஒன்றுதான் ‘ஆயுள் தண்டனை அனுபவங்கள்’. 1949-ல் தொடங்கிய நெல்லைச் சதி வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கே. பாலதண்டாயுதம் தன் சிறை அனுபவங்களை இதில் பதிவு செய்திருக்கிறார். விடுதலைக்கு பிந்திய இந்திய அரசியல் சூழலில் சிக்கி, சிறையில் அடைக்கப்பட்டவர் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பாலதண்டாயுதம். சிறைத் தண்டனையின்போது பல சித்திரவதைகளுக்கு ஆட்படுத்தப் பட்டாலும் அவருடைய எழுத்துகள் தோழமையின் பலத்தையும், மனித நேயத்தின் மகத்துவத்தையும் பறை சாற்றுகின்றன.
ஆயுள் தண்டனை அனுபவங்கள்
ஆசிரியர்: கே. பாலதண்டாயுதம்
வெளியீடு: சமூக விஞ்ஞானப் பயிலரங்கம்
கலாமன்றம், ஜவஹர்புறம்
வேலாண்டிபாளையம்
கோயமுத்தூர் - 641 025
விலை: 125/-
தொடர்புக்கு: 93632 42494
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT