Last Updated : 28 Feb, 2015 09:30 AM

 

Published : 28 Feb 2015 09:30 AM
Last Updated : 28 Feb 2015 09:30 AM

கருவிழிகளால் ஒளிரும் புன்னகை: இயக்குநர், நடிகர், ரா. பார்த்திபன்

நான் எழுத்தாளனும் இல்லை, வாசகனும் இல்லை. அதிகம் யோசிக்கிறவன் என்று வேண்டுமானால் சொல்லலாம். சில புத்தகங்கள் நம்மைப் புரட்டிப் போடும். அப்படி சமீபத்தில் என்னை புரட்டிப்போட்ட புத்தகம் ஜெயமோகன் எழுதிய ‘இரவு’. வாசிக்கத் தொடங்கிய கணம் முதல், இந்த நாவலின் உள்ளடக்கம், வடிவம், பார்வை எல்லாம் இன்றுவரை என்னை ஆட்கொண்டிருக்கின்றன.

இரவு எத்தனை அழகான விஷயம்! இரவு 8 மணிக்குத் தூங்கி காலை 5 மணிக்கு எழும் வழக்கம் கொண்டவன் நான். இப்படியான எனக்கு இரவை அறிமுகம் செய்தவர் ஏ.ஆர். ரஹ்மான்தான். தமிழ்ப் படத்துக்காக நான் ஒருபக்கம், இந்தி படத்துக்காக ஆமிர் கான் ஒருபக்கம் என்று நிலவோடு சேர்ந்து அவரிடம் காய்ந்து கிடப்போம். இதை நிலா காய்தல் என்றே சொல்லலாம்.

அதேபோல இந்தப் புத்தகம் வழியே இரவின் உண்மையான ஆன்மாவை ரசிக்கத் தொடங்கினேன். பி.சி.ஸ்ரீராம், ரவி கே. சந்திரன், ரவிவர்மன் என்று நெருக்கமான ஒளிப்பதிவாளர்களுக்கு இந்தப் புத்தகத்தைப் பரிந்துரைத்திருக்கிறேன். நாவலில் இரவுக்கும் பகலுக்கும் இடையேயான வித்தியாசத்தை அத்தனை அழகாகப் பதிவுசெய்திருப்பார் ஜெயமோகன்.

“எல்லையற்ற தூரிகையொன்றின் நுனியில் சொட்டி நிற்கும் கரும் சாயம் இந்த இரவு. இரவின் புன்னகை மிக அந்தரங்கமானது. உதடுகள் இல்லாமல், பற்கள் இல்லாமல், கருவிழிகளால் மட்டுமே ஒளிரும் புன்னகை” என்று இரவை வார்த்தைகளால் வசப்படுத்தியிருப்பார் ஜெயமோகன்.​

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x