Published : 23 Apr 2014 11:05 AM
Last Updated : 23 Apr 2014 11:05 AM

தன்னலமற்ற அன்பின் வெளிப்பாடு

பகவத் கீதையைப் புனித நூலாக் கியது நாம் செய்த மிகப் பெரிய தவறு என்று இந்நூலைத் தொடங்கி யுள்ளார் வரலொட்டி ரெங்கசாமி. பகவத் கீதையை ஒரு தத்துவமாக நினைத்து ஒதுக்கிவைக்காமல் வாழ்க்கைக்குத் தேவையான ஒன்றாகப் பார்க்கும்போது அதில் ஏராளமான வாழ்வியல் விளக்கங்கள் பொதிந்துகிடக்கின்றன என்கிறார் ஆசிரியர்.

பகவத் கீதையை முதிய வயதில் படிக்கலாம் என்னும் எண்ணம் குறித்த மாறுபட்ட கருத்தைப் பதிவு செய்திருக்கிறார் வரலொட்டி ரெங்க சாமி. இருபத்தைந்து வயதில் படிக்க வேண்டிய வாழ்க்கைச் சூத்திரத்தை வாழ்ந்து முடித்தபின் படிப்பதால் என்ன பயன் எனக் கேள்வி எழுப்புகிறார்.

பகவத் கீதையின் சாரம் பூரண அன்பு. தன்னலம் கருதாத தூய்மையான அன்பு. பொது வாகக் கடமையைச் செய் பலனை எதிர்பாராதே என்பது மட்டுமே கீதையின் சாரம் என்றிருப்பவர் களுக்கு அதன் ஆழத்தைத் தொட்டு அன்பின் வெளிப்பாட்டை உணர்த்து கிறார் ஆசிரியர்.

வாழ்க்கை அனுபவங்களைச் சொல்லி பகவத் கீதைக்கும் அந்த அனுபவங்களுக்கும் உள்ள தொடர் பையும் விளக்குகிறார். கண்ணா வருவாயா என்னும் இந்த 496 பக்க நூலை ஒரு பெரிய காதல் கடிதம் என்கிறார் ஆசிரியர்.

பகவத் கீதை என்பதை ஆன்மிகத் தத்துவமாக மட்டும் கருதாமல் அனைவரும் படித்து அனுபவிக்க வேண்டும் என்னும் விழிப்புணர்வு தரும் வகையில் எழுதப்பட்டுள்ளது இந்நூல்.

கண்ணா வருவாயா வாழ்வியல் அனுபவங்கள்
வரலொட்டி ரெங்கசாமி
தனலெட்சுமி பதிப்பகம்
S-17, அரவிந்த் நரேன் என்கிளோவ்
8, மாசிலாமணி தெரு
சென்னை 600 017
விலை ரூ. 330
தொலைபேசி: 24364243

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x