Published : 06 Jul 2019 09:14 AM
Last Updated : 06 Jul 2019 09:14 AM
கீழ் நடுத்தர வர்க்கத்தில் பிறந்து, மாணவப் பருவத்திலேயே காங்கிரஸ் இயக்கத்தில் களப்பணியைத் தொடங்கி, பாலினரீதியான புறக்கணிப்புகளை முறியடித்து, கடுமையான உள்கட்சிப் போராட்டங்கள் நடத்தி, இறுதியில் தனிக் கட்சி தொடங்கி, வங்கத்தை 34 ஆண்டுகள் ஆண்டு, மாநிலமெங்கும் கிளைவிரித்து ஆலமரமாய்த் திகழ்ந்த திரிணமூல் காங்கிரஸ் நிறுவனரான மம்தா பேனர்ஜி, தானே எழுதிய நினைவலைகளின் தொகுப்பு இது. அரசியலில் புதிய உச்சத்தைத் தொட்ட மம்தா, இன்று தனது ஆட்சியை 2021 வரை தக்கவைத்துக்கொள்ள இயலுமா என்ற கேள்வியை எதிர்கொண்டுவருகிறார். இன்றைய அரசியல் நோக்கர்கள் களப்போராளியாக வலிமை பெற்ற மம்தாவின் அரசியல் வரலாற்றை உற்றுநோக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் நூல் இது.
மை ஜர்னி:மம்தா பேனர்ஜி
பீ புக்ஸ்,
புதுடெல்லி – 110 002.
விலை: ரூ.450
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT