Published : 23 Jul 2016 11:34 AM
Last Updated : 23 Jul 2016 11:34 AM
நவீன அறிவியல் தொழில்நுட்பம் வேகமாய் வளர்ந்திருக்கும் இந்நாளில் கடிதம் எழுதுவதென்பதே பெரிதும் அருகிப்போன செயலாகிவிட்டது. “ஊருக்குப் போனதும் ஒத்த வரி கடுதாசிப் போடு..!”என்கிற குரல்கள் ஒலித்த பேருந்து, ரயில் நிலையங்களில் “போனதும் ஒரு மெஸேஜ் போடு..!” என்பது போன்ற குரல்களே இப்போது அதிகமாக ஒலிக்கின்றன.
இச்சூழலில், ஒரு ஆசிரியருக்கும் அவரது மாணவர்களுக்குமிடையே நிகழ்ந்த 42 கடிதப் பகிர்வுகள் நூலாகியுள்ளன.13 ஆண்டுகளாகக் கல்விப் பணியாற்றிவரும் பேராசிரியர் கி. பார்த்திபராஜாவுக்கு அவரது மாணவர்கள் எழுதிய கடிதங்களிலும், மாணவர்களுக்கு பேராசிரியர் எழுதிய கடிதங்களிலும் அன்பும் நெகிழ்வுமான பலப்பல பகிர்வுகள் இழையோடிக் கிடக்கின்றன. ஒரு ஆசிரியர் மாணவர்களோடு எப்படியான உறவைப் பேண வேண்டும் என்பதற்கான அடையாளமாகத் திகழ்கின்றன இந்தக் கடிதங்கள்.
-மு.மு
இப்படிக்குத் தங்கள் அன்புள்ள…
கி. பார்த்திபராஜா
விலை:ரூ.130/-
வெளியீடு: புக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை 600 018.
தொடர்புக்கு: 044 2433 2424.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT