Published : 24 Sep 2016 11:46 AM
Last Updated : 24 Sep 2016 11:46 AM
உலகெங்கும் வாசிக்கும் வயதுள்ள குழந்தைகள் இன்றளவும் தேடும் முதல் பெயர்களில் ஒன்று ரோல் தால். அதற்குக் காரணம், அவருடைய கதைகள் புதுமையும் குழந்தைகளுக்கே உரிய குறும்புத்தனமும் நிறைந்து காணப்பட்டதுதான்.
இனிப்பு-சாக்லேட்களின் மீது குழந்தை களுக்கு உள்ள ஆர்வம், கடுமை காட்டும் ஆசிரியர்கள் மீதான கோபம் போன்ற உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த அவர், கற்பனையின் உச்சத்தைத் தொடும் சுவாரசியக் கதைகளை எழுதியுள்ளார். பி.எஃப்.ஜி. எனப்படும் 'பிக் ஃபுட் ஜெயன்ட்' போன்ற பெரிய கால் ராட்சசர்களும் நமக்கு உதவக்கூடிய நல்லவர்கள்தான் என்ற நம்பிக்கையை தன் கதைகள் மூலமாக உருவாக்கினார். மர்மங்களும் ரகசியங்களும் அவருடைய கதைகளின் நிரந்தர விளையாட்டு மைதானங்கள்.
இப்படிக் குழந்தை எழுத்தாளராக உலகப் பிரபலம் என்றாலும், பெரியவர்களுக்கான திகில் கதைகளையும் அவர் எழுதியுள்ளார். 'டேல்ஸ் ஆஃப் தி அன்எக்ஸ்பெக்டட்' - அவருடைய திகில் கதைகளின் தொகுதி. அவருடைய கதைகள் 50-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. குறைந்தபட்சக் கணிப்பின்படியே அவரு டைய புத்தகங்கள் 20 கோடி பிரதிகள் விற் பனையாகியுள்ளன. சில கதைகள் திரைப் பட இயக்குநர்களையும் ஈர்த்து, வெள்ளித் திரைகளில் விரிந்துள்ளன. மறக்க முடியா தவை: மட்டில்டா (1996), சார்லியும் சாக் லேட் ஃபேக்டரியும் (2005), மிகச் சமீபத்தில் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் ‘தி பி.எஃப்.ஜி.’
காயத்துக்கு மருந்து
நார்வே வம்சாவளியைச் சேர்ந்த ரோல் தால், ஆரம்பத்தில் ஷெல் எண்ணெய் நிறுவனத்துக்காக ஆப்பிரிக்காவில் பணி புரிந்தார். இரண்டாம் உலகப் போரின்போது பிரிட்டன் போர்ப்படை விமானியாகச் செயல் பட்டுள்ளார். இந்த வேலைகளை விட்டுவிட்டு முழு நேரமும் அவர் எழுத வந்ததற்குக் காரணம், போரின்போது தலையில் ஏற்பட்ட பலத்த அடி. காயம் பலருடைய வேலையை முடக்கிப்போடும் என்றால், நேரெதிராக நகைச்சுவையும் குறும்பும் கொப்பளிக்கும் கதைகளை ரோல் தால், எழுதித்தள்ள ஆரம்பித்து விட்டார்.
இவருக்கும் ‘குட்டி இளவரசன்’ எழுதிய பிரெஞ்சு எழுத்தாளர் அந்த்வாந்த் செந்த் எக்சுபரிக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. இருவருமே இரண்டாம் உலகப் போரில் விமானியாகச் செயல்பட்டவர்கள். எக்சுபரி, பிரான்ஸின் தேசிய அடையாளங்களில் முக்கியமானவர். ரோல் தால், பிரிட்டனின் தேசிய அடையாளங்களில் முக்கியமானவராக இருக்கிறார்.
அது ஒரு தனி உலகம்
போர் தந்த அவநம்பிக்கை காரணமாக வாழ்க்கைக்கான அர்த்ததைத் தேடும் புத்தகங்களை எழுதிய எக்சுபரி, அவர் விமானத்தைச் செலுத்திச் சென்றபோது மாயமாய் மறைந்தார். அவருடைய ‘குட்டி இளவரசன்’ இவன்றைக்கும் உலகைத் தன் கைக்குள் வைத்து பூட்டிக்கொண்டுள்ளது. இன்னொருபுறம், குழந்தைகளுக்காகத் தனி உலகை சிருஷ்டித்த ரோல் தால், தன் புத்தகங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு குட்டி சாம்ராஜ்ஜியத்தையும் உருவாக்கினார். அவருடைய சாம்ராஜ் ஜியத்தில் முக்கியமானது, பிரிட்டன் பக்கிங்ஹாம்ஷையர் மாகாணத்தில் 1996-ல் திறக்கப்பட்ட 'தி ரோல் தால் சில்ட்ரன்ஸ் கேலரி' அருங்காட்சியகம். குழந்தை எழுத்தாளரை மையப்படுத்திய உலகின் ஒருசில அருங்காட்சியகங்களில், இது முதன்மையானது.
அருங்காட்சியகம் இருக்கட்டும். உலகில் எத்தனை எழுத்தாளர்களுக்கு ஆக்ஸ் போர்டு அகராதி வெளியிட்டிருக் கிறது என்று தெரியவில்லை; ரோல் தாலுக்கு இருக்கிறது. ஆக்ஸ்ஃபோர்டு ரோல் தால் அகராதி (The Oxford Roald Dahl Dictionary). இந்த அரிய அகராதியில் ரோல் தால் பயன்படுத்திய வழக்கு மொழிச் சொற்களும், அவர் புதிதாக உருவாக்கிய கோபல்ஃபங்க் (Gobblefunk) என்ற புதுமொழியின் சொற்களும் இடம்பெற்றுள்ளன. ரோல் தாலின் தனி உலகை அடையாளம் காட்ட, வேறென்ன புதிதாக வேண்டும்?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT