Published : 28 Jan 2014 12:00 AM
Last Updated : 28 Jan 2014 12:00 AM
‘இன்றைக்கு ஒரு கனவு மெய்ப் பட்டிருக்கிறது!’ என்ற மாலனின் கூற்றோடு தொடங்கியது ‘தாயகம் கடந்த தமிழ்’ என்னும் உலகத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு.
கோவையில் தமிழ்ப் பண் பாட்டுக் கழகம், ஜனவரியில் மூன்று நாட்கள் நடத்திய மாநாட்டில் உலகம் முழுவதிலுமிருந்து எழுத் தாளர்களும் ஆய்வாளர்களும் கலந்துகொண்டு தமிழின் இன்றைய நிலை குறித்து கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். மூன்று நாட்களில் ஏழு அமர்வுகள் நடை பெற்றன. நிகழ்ச்சிகளை மாலன் ஒருங்கிணைத்தார்.
கனடாவில் 3 லட்சம் தமிழர்கள்
“கனடா, உலகத்தில் தமிழர்கள் அதிகம் வாழும் இரண்டாவது தேசம். எங்கள் சொந்த நாட்டில் என்னவெல்லாம் கிடைக்க வில்லையோ, அது எல்லாம் இந்த நாட்டில் கிடைத்தது. கிடைக்கிறது. இங்கே மட்டும் 3 லட்சம் தமிழர்கள் வசிக்கிறார்கள். வன்னித்தெரு என்று ஒரு தெரு இங்கே இருக்கிறது. எங்கள் தமிழ் மக்களே நிர்மாணித்த அந்த தெருவில் அத்தனை பேரும் சுதந்திரமாக இருக்கிறோம். இங்கே யாரும் எங்களுக்குச் சொந்தமான வீதியை அழிக்கப்போவதில்லை. தமிழன் இங்கே மட்டுமில்லை. பனியும் பனி சார்ந்த இடத்திலும்கூட வசிக்கிறான். சூரியன் மறையாத நாட்டுக்கு சொந்தக்காரன் ஆங்கி லேயன் என்று ஒரு காலத்தில் சொல்லுவார்கள். இன்று அப்படி எல்லா மூலையிலும் தமிழன் வாழ்கிறான். இன்றைக்கு சூரியன் மறையாத புலம் தமிழ்ப் புலம்தான்!” என்று முத்துலிங்கம் கூறியிருந்தார்.
தமிழகத்தில் தமிழ் கையாளப் படும் விதம், புலம் பெயர் தமிழர் களின் மொழிசார் பிரச்சினைகள், நவீன தொழில் நுட்பத்திற்கும் தமிழுக்கும் உள்ள உறவு, புலம் பெயர் தமிழர்களின் பிரச்சினைகளைத் தமிழ் எழுத்தாளர்கள் பதிவுசெய்வதில் இருக்கும் போதாமை எனப் பல அம்சங்கள் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டன. தமிழை முன்னிறுத்தி நடந்த இந்த விவாதங் களில் தனிநபர் சார்ந்த விருப்பு வெறுப்புகள் காணப்படவில்லை. இலக்கிய அரசியலும் எட்டிப் பார்க்கவில்லை.
தமிழ்ப் பண்பாட்டு மையம் நடத்திய உலகத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டின் இறுதி வடிவாகத் தீர்மானமாக எதுவும் இயற்றப்படவில்லை என்றாலும், பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.
மின்நூல்கள்
அமெரிக்காவிலிருந்து வந்தி ருந்த திருமூர்த்தி ரங்கநாதன், டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலமாக மின்நூல்களை வெளியிட்டு வருவதாகவும், அதன் மூலம் செலவுகள் குறையும் என்றும் கூறினார். தமிழ்நாட்டில் ரூ. 150 பெறுமானமுள்ள நூலை வாங்கிக் கொண்டு விமானம் ஏறினால் அதை எடைபோடும்போது அதற்கு தனியாக செலவு செய்ய வேண்டியிருக்கிறது. அதைக் களையவும், எல்லோருக்கும் நூல்கள் சென்றடையவும் இதன் மூலம் வசதி ஏற்படும் என்றார்.
தமிழ்ப் பண்பாட்டு மையத் தலைவர் டாக்டர் நல்லா பழனிசாமி அமர்வு நிறைவின்போது, 'தமிழ்வழிக் கல்வி பயன்பாடு குறைந்ததனால்தான் தமிழ் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. எங்கும் எதிலும் தமிழ் வழிக்கல்வி ஊக்குவிக்கப்பட வேண்டும்!' என்று கேட்டுக்கொண்டார்.
ஏழு அமர்வுகள். 20க்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பிரதிநிதி கள், 40க்கும் அதிகமான ஆய்வுக் கட்டுரைகள். பங்கேற் பாளர்களாகச் சில ஆயிரம் பேர். இந்த மாநாடு அளவில் பெரியது அல்ல. ஆனால் தமிழ் குறித்த ஆழமான கவலைகளும் சிந்தனைகளும் கனவுகளும் திட்டங்களும் பரிமாறிக் கொள்ளப் பட்ட மாநாடாக விளங்கியது. தமிழ் இன்று உலக மொழியாக இருக்கிறது என்பதற்கான மற்று மொரு அத்தாட்சி இந்த மாநாடு. அதுவே இதன் முக்கியமான பங்களிப்பு என்று சொல்லலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT