Published : 20 Jun 2015 10:40 AM
Last Updated : 20 Jun 2015 10:40 AM
ஆசிரியர்: எர்னஸ்ட் ஹெமிங்வே
மொழிபெயர்ப்பு : ச.து.சு. யோகியார்
நாவலின் கதை
வயதில் முதிய மீன்பிடிக் கிழவர் சாண்டியாகோவுக்கு 84 நாட்கள் தொடர்ந்து கடலுக்குச் சென்றும் மீன் சிக்காத துரதிர்ஷ்டம் நேர்கிறது. அந்த துரதிர்ஷ்டம் பிடித்த கிழவருக்கு உதவியா ளனாக இருப்பதற்குக்கூட யாரும் விரும்பாத நிலையில், மீனைத் தேடி ஆழ்கடலுக்குள் செல்கிறார். 18 அடி நீள மீன் ஒன்று சிக்குகிறது. அந்த மீன் சாண்டியாகோவையும் படகையும் நிலைகுலைய வைக்கும் போராட்டம்தான் இக்கதை. கடைசியில் சாண்டியாகோ வெல்கிறார். ஆனால், அவரால் மீனைக் கரைக்குக் கொண்டுவர முடிந்ததா என்பதுதான் கதை.
நாவலின் சிறப்பம்சம்
ஒரு தீவிரமான சூழ்நிலையில், எதிர்மறை யான நிலைமைகளிலும் போராடுவதற்கு வலுவுடன் எழும் உத்வேகம்குறித்து எழுதப்பட்ட மகத்தான படைப்பு இது. 1952-ல் வெளியிடப்பட்ட இப்படைப்பு, உச்சபட்ச வார்த்தைச் சிக்கனம் மற்றும் வர்ணனைகள் கொண்ட சிறுநாவலாகும். 1954-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றது. இப்படைப்பு மூலம் எர்னஸ்ட் ஹெமிங்வே உலகம் முழுவதும் பரவலாக அறிமுகமானார்.
நாவலின் தாக்கம்
கியூபாவின் முன்னாள் அதிபரும் இலக்கிய ரசிகருமான ஃபிடல் காஸ்ட்ரோ தனது காரில் எப்போதும் வைத்திருந்த புத்தகங்களில் ஒன்று இது. தனது மாஸ்டர் என்று அவர் ஹெமிங்வேயை வியந்துள்ளார். இந்த நாவலின் கதை ஹாலிவுட்டில் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. இதில் கிழவனாக நடித்த ஸ்பென்சர் டிரேசி ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டார்.
கடலும் கிழவனும்
எர்னஸ்ட் ஹெமிங்வே
தமிழில்: ச.து.சு.யோகியார்
எஸ்.எஸ். பப்ளிகேஷன், 8/2, போலீஸ் குவார்ட்டர்ஸ் ரோடு,
தி.நகர், சென்னை-17.
தொடர்புக்கு: 044-24332696
விலை: ரூ.60/-
- ஷங்கர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT