Published : 25 Jun 2016 10:28 AM
Last Updated : 25 Jun 2016 10:28 AM
ஒரு மொழி பேசும் இன மக்களை இன்னொரு மொழி பேசும் இன மக்கள் பூர்வகுடிகள் என்று தாங்கள் நம்பும் அதிகாரத்தைக் கொண்டு எல்லா வகைகளிலும் ஒடுக்க முனைவதை யாராலும் ஏற்க முடியாது. அதை ஒடுக்க அல்லது வேரறுக்கக் கிளர்ந்தெழும் விடுதலை வேட்கை கொண்ட இயக்கங்களும் சொந்தச் சமூகத்தைப் பற்றிய போதிய புரிதல் இல்லாமல் இருந்தது குறித்தும், இன விடுதலையின் பெயரால் தமிழ்ப் பகுதிகளிலிருந்து முஸ்லிம்களின் உடைமைகளைப் பறித்துக்கொண்டு வெளியேற்றிய கொடூரத்தையும் பற்றி விவரிக்கும் நாவல்தான் சாத்திரியின் ‘ஆயுத எழுத்து’.
அப்போதைய தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் ஈழ மக்கள் மீது கொண்ட பரிவு, புலிகளின் தமிழக ஆயுதப் பயிற்சிகள் என விரிகிற நூலில் பெண் போராளிகள் குறித்தும், முதல் கரும்புலி பற்றியான குறிப்புகளும் இந்த நாவலின் இடம்பெறுகின்றன. கண்ணி வெடியும் தற்கொலைப் படையும் புலிகளின் பிரத்தியேகப் போராட்ட உத்திகளாக இருந்தன என்பதை இந்த நாவலின் மூலம் காண முடிகிறது. அதே நேரத்தில் சிங்கள பேரினவாதத்தின் கொடூரத்தையும் மிகத் துல்லியமாகவே நாவல் பதிவு செய்துள்ளது. உல்லாசம், காமம், காதல், சாகசம், நெருக்கடி என மனித வாழ்நிலையின் பல்வேறு சுவராசியங்களையும் சுமந்தும், கடந்தும் நிற்கும் ஒரு இயக்கப் போராளியின் அனுபவங்கள் நிறைந்த இந்த நாவல் முழுமையானதல்ல என்றாலும் ஈழப் போர் குறித்த ஆவணப் படைப்புகளுள் ஒரு முக்கிய வரவு இந்த நாவல்.
ஆயுத எழுத்து
சாத்திரி
விலை: (இந்தியாவில்) ரூ. 300
வெளியீடு: திலீபன் பதிப்பகம்.
இந்தியாவில் விற்பனை உரிமை: எதிர் வெளியீடு: 98650 05084
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT