Published : 15 Nov 2013 12:00 AM
Last Updated : 15 Nov 2013 12:00 AM
செக்ஸ் (sex) என்ற சொல்லுக்கு ஆங்கிலத்தில் இரண்டு விதமான பொருள்கள் உண்டு. மனிதர்கள் உள்ளடக்கிய உயிரினங்களில் ஆணா, பெண்ணா என்பது போன்று பிரித்து வகைப்படுத்தும் பொருளில் ‘பால், பாலினம்’ ஆகிய சொற்களைப் பயன்படுத்தலாம்.
(எ.டு.) கருவிலிருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிந்துகொள்ளும் சோதனையைச் செய்வது சட்டத்துக்குப் புறம்பானது./ திருநங்கைகள் தங்களை மூன்றாம் பாலாக எல்லாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று போராடிவருகின்றனர்.
இரண்டாவது பொருள், மனிதர்கள் காம உணர்வின் காரணமாக உடல்ரீதியாக உறவுகொள்வதைக் குறிக்கும். இந்தப் பொருளுக்கு ‘உடலுறவு’என்ற சொல்லைப் பயன்படுத்தலாம்.
‘புணர்ச்சி’என்ற சொல்லுக்கும் இதே பொருள் இருந்தாலும், அந்தச் சொல் இந்தப் பொருளில் தற்போது அருகிக்கொண்டுவருகிறது.
செக்ஸுவல் ஃபீலிங் (sexual feeling), செக்ஸுவல் டிசைர் (sexual desire) ஆகிய சொற்களுக்கு ‘பாலுணர்வு, பாலுறவு உந்துதல்’ஆகிய சொற்களைப் பயன்படுத்தலாம். ‘காமம், காம உணர்வு’என்ற சொற்களும் இதே பொருளில் பயன்படுத்தப்படுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT