Published : 16 Jul 2016 10:07 AM
Last Updated : 16 Jul 2016 10:07 AM

மகாத்மா புலே வரலாறு

இந்தியாவில் மகாத்மா என்று அழைக்கப்பட்டவர்கள் காந்தியடிகளும் ஜோதிராவ் புலேயும். புலே தனது மனைவி சாவித்திரியோடு இணைந்து 1852-ல் தாழ்த்தப்பட்ட பெண்களுக்கான பள்ளியைத் தொடங்கியவர். 13 வயதாக இருக்கும்போது புலே 9 வயது சாவித்திரியை மணந்தவர்தான். ஆனாலும், அவர்கள் குழந்தைத் திருமணத்துக்கு எதிராகவும், மறுமணம், இளம் விதவைகளுக்கான மறுவாழ்வு, அவர்களுக்கு பிறந்த குழந்தைகளுக்காக பாதுகாப்பு என்றெல்லாம் போராடி சமூகத்தின் பிற்போக்குத்தனத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு முனைகளில் பாதுகாப்பு வழங்கினார்கள். நவீன இந்தியாவின் முதல் ஆசிரியையாகவும் சாவித்திரி உருவானார்.

தாழ்த்தப்பட்ட மக்கள் எங்கள் வீட்டுக் கிணற்றில் தண்ணீர் எடுத்துக்கொள்ளலாம் என 1868-ல் அவர்கள் அறிவித்தனர். இத்தகைய செயல்பாடுகளால் உயிருக்கு ஆபத்து வந்தபோதும் அவர்கள் தங்களின் பணிகளைத் தொடர்ந்துள்ளனர்.

நவீன இந்தியாவின் சிற்பிகளில் முக்கியமானவர்களுள் ஒருவரான புலேயின் வாழ்க்கை வரலாற்றை இந்தச் சிறுநூல் எளிமையாக அறிமுகப்படுத்துகிறது.

- நீதி

மகாத்மா ஜோதிராவ் புலே

க. ஜெயசந்திரன்

விலை: ரூ. 50,

சமத்துவக் கழகம் வெளியீடு, கோயம்புத்தூர்-18

தொடர்புக்கு: 94877 00907

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x