Published : 18 Oct 2014 04:45 PM
Last Updated : 18 Oct 2014 04:45 PM
லண்டனில் உள்ள மெட்ரோ ரயிலில் உலகின் சிறந்த கவிதைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. அங்கே, நமது குறுந்தொகையும் இடம் பெற்றிருக்கிறது. செம்புலப்பெயனீராரின் ‘யாயும் யாயும் யாராகியரோ’ பாடலும், அதற்கு ஏ.கே. ராமானுஜன் செய்திருக்கும் ஆங்கில மொழிபெயர்ப்பும் அங்கே காட்சிக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
தமிழின் உச்சங்களுள் ஒன்றாகக் கருதப்படும் குறுந்தொகை, உலகின் வேறொரு திசையைக் கவித்துவத்தாலும் அதன் மூலம் சொல்லப்படும் காதலாலும் இணைக்கிறது. குறுந்தொகைக்கு எத்தனையோ பதிப்புகளும் உரைகளும் இருந்தாலும், உ.வே.சா-வின் உரை தனிச்சிறப்பு பெற்றது. உ.வே.சா. தனது பதிப்பில் 100 பக்கங்களுக்கு மேல் நீளும் அறிமுகம் ஒன்றைக் கொடுத்திருப்பார். குறுந்தொகை மூலமாகக் கிடைக்கும் செய்திகளை யெல்லாம் ஒருங்கே திரட்டி, அந்த அறிமுகத்தை எழுதியிருக்கிறார்
உ.வே.சா. ஐந்து திணைகள் குறித்த செய்திகள், சங்ககால வாழ்க்கை முறை, மரம், செடி, கொடி, விலங்குகள், பறவைகள் ஆகியவற்றைப் பற்றிய தகவல்கள், பாடியோர் குறிப்புகள் என்று உ.வே.சா. இந்தப் பதிப்பில் நம்மைப் பிரமிக்க வைக்கிறார். ஒரு ஆய்வுப் பதிப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உ.வே.சா. ஏற்படுத்திய உச்சம்தான் இந்தப் பதிப்பு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT