Last Updated : 15 Sep, 2018 09:06 AM

 

Published : 15 Sep 2018 09:06 AM
Last Updated : 15 Sep 2018 09:06 AM

நதிகளை அளவிடுவோம்

உலகின் தூய்மையான நீரின் ௦.3% மட்டுமே நதிகள் அளிப்பதாக ஒரு கணக்கெடுப்பு சொல்கிறது. ஏரிகள், குளங்கள், சதுப்பு நிலங்கள் எல்லாம் நதிகளைப் போன்று 50 மடங்கு அதிக நீரை வைத்திருக்கின்றன. இருந்தாலும், ஒரு நிலப்பரப்பின் பல்லுயிர்த் தன்மைக்கு நதிகள் அவசியம். ஒரு நதி வெவ்வேறு இடங்களிலும் காலங்களிலும் வெவ்வேறு நீர் அளவைக் கொண்டிருக்கின்றன. இவற்றைச் சரியாக அளவிட வேண்டும். ஆனால், இன்றுவரை அது சாத்தியமாகவில்லை. நதிகளை நேரடியாக அளவிடுவது சாத்தியமற்றது. எனவே, பல கணித முறைகளைப் பயன்படுத்திதான் நதிகளின் பரப்பளவையும், நீரின் அளவையும் கணக்கிடுகின்றனர். அலென், பவல்ஸ்கி என்ற விஞ்ஞானிகள் செயற்கைக்கோள் அனுப்பிய படங்களைக் கொண்டு அமெரிக்கா, கனடா தேசங்களின் நதிகளை அளவிட்டார்கள். பிறகு, நேரடியாக தரைவழி அளந்து ஒப்பிட்டுப் பார்த்தபோது செயற்கைக்கோள் படங்கள் நதிகளை அளவிடும் முறையில் முன்னேற்றம் கண்டுள்ளன என்று கூறுகின்றனர். மனித பயன்பாட்டினால் எவ்வாறு நதிகள் சுருங்கி விரிவடைகின்றன என்பதை அறிந்து அதனால் பல்லுயிர்த் தன்மை, அமிலச் சுழற்சி, உணவுச் சுழற்சி எப்படி பாதிப்படைந்துள்ளன என்று பலவற்றை அறிய முடியும். எதிர்காலத்தில் எதிர்கொள்ளவிருக்கும் இடர்களில் நீர் முக்கியமானதாக இருப்பதால் இந்த ஆராய்ச்சி முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

Margaret Palmer, Albert Ruhi,

‘Measuring Earth’s Rivers’, Science,

10 August, 2018.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x