Last Updated : 04 May, 2019 08:09 AM

 

Published : 04 May 2019 08:09 AM
Last Updated : 04 May 2019 08:09 AM

நூல் நோக்கு: ஜவ்வாது மலைவாழ்வின் ஆவணம்

மீண்டும் நாரணோ ஜெயராமன்

‘வேலி மீறிய கிளை’ கவிதைத் தொகுதி வழியாகச் சிறந்த கவிஞராக அடையாளம் காணப்பட்டவர். அன்றாட வாழ்வின் செக்குமாட்டுத் தன்மை, பழக்கங்களின் சுமைகளிலிருந்து விடுபட்டுப் பறக்க எண்ணிய  வலுவான  நவீனத்துவக் குரல்களில் ஒன்று இவருடையது. ஜே.கிருஷ்ணமூர்த்தியில் உந்துதல் பெற்ற புதுக்கவிஞர். ‘ஒதுங்கி நின்று, அலட்சியமும், நெளிவும், புலனுலகை அது உள்ளபடியே துணிந்து, பரிந்து கண்கொண்டு அனுபவிக்கும் விவேகமும், அந்த விவேகத்தைப் பேச்சமைதி சார்ந்த ஒரு சரஸமொழியில் வெளியிடும் விசேஷத்தன்மையும் நாரணோ ஜெயராமனுடையவை’ என்று பிரமிள் இவரை வரவேற்றிருக்கிறார். அத்தொகுப்புக்குப் பிறகு எழுதிய கவிதைகளையும் சேர்த்து டிஸ்கவரி புக் பேலஸ், ‘நாரணோ ஜெயராமன் கவிதைகள்’ நூலை அழகான முறையில் எஸ்.வைத்தீஸ்வரனின் முன்னுரையுடன் வெளியிட்டுள்ளது.

நாரணோ ஜெயராமன் கவிதைகள்

டிஸ்கவரி புக் பேலஸ்

கே.கே.நகர் மேற்கு, சென்னை-78

விலை: ரூ.150

  8754507070

------------------------------------------------------------------------------------------

ஜவ்வாது மலைவாழ்வின் ஆவணம்

செஞ்சி நாயக்கர் வரலாறு, தாராசுரம் ஐராவதீச்சுரம் சிற்பங்கள், ஆனைமலைக் காடர்கள், வால்பாறை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் என வாழ்க்கைமுறை சார்ந்த கள ஆய்வுகளையும், இலக்கியங்கள் மற்றும் சமூக வரலாற்று நூல்களில் மேற்கொண்ட ஆய்வுகளையும் ஆவணப்படுத்திவருகிறார் ஜே.ஆர்.இலட்சுமி. இந்தப் புத்தகத்தில் ஜவ்வாது மலைவாழ் மலையாளப் பழங்குடிகளின் வாழ்க்கை முறை, நில அமைப்பு, அவர்களின் கலைப் பங்களிப்பு, மொழிநடை உள்ளிட்ட விஷயங்களை விரிவாகப் பதிவுசெய்திருக்கிறார். ஒவ்வொரு சொற்களையும் இங்குள்ளவர்கள் எப்படி உச்சரிக்கிறார்கள் என்பது தொடர்பான பட்டியலும், தரமாக அச்சிடப்பட்டிருக்கும் வண்ணப்படங்களும் மிக முக்கியமான ஆவணங்களாக இருக்கின்றன.

வாழ்வும் மொழியும்

ஜே.ஆர்.இலட்சுமி

மதன்மோனிகா பதிப்பகம்

பெரியார் நகர்,

சென்னை-82.

விலை: ரூ.200

  98407 19616

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x