Last Updated : 02 Mar, 2019 10:08 AM

 

Published : 02 Mar 2019 10:08 AM
Last Updated : 02 Mar 2019 10:08 AM

பிறமொழி நூலகம்: படைவீரனின் வாழ்க்கை

அரசன் இட்ட கட்டளையை சிரமேற்கொண்டு நிறைவேற்றும் வீரனின் எண்ண அலைகள் எப்படியிருக்கும்? தொலைதூர கிராமங்களில் வாய்மொழியாக உலவும் செய்திகளின் பின்னால் உள்ள வாழ்க்கையை, அதன் சோகத்தை, தவிப்பை, ஆற்றாமையைக் கவித்துவமாக வெளிப்படுத்தும் கன்னட நாவல் இது. ஹைதர் அலி - திப்பு சுல்தான் காலத்தில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி படைகளை எதிர்த்த போராட்டம் எத்தகைய வீரர்களை உருவாக்கியது என்பதைச் சித்தரிக்கும் இந்த நாவல் தொன்மம், வரலாறு, வாய்மொழி இலக்கியம் ஆகியவற்றின் சாரத்தையும் உள்ளடக்கியதாக விளங்குகிறது. கர்நாடக சாகித்ய அகாடமியின் விருது பெற்ற இந்நாவல் ஒரு வீரரின் பார்வையில் காலனிய காலக்கட்ட வரலாற்றை நகர்த்திச் செல்கிறது.

அஞ்ஞாதா -

த மெமோய்ர்ஸ் ஆஃப் திப்பு’ஸ் அன்னோன் கமாண்டர்

கிருஷ்ணமூர்த்தி ஹனூரு  ஆங்கிலத்தில் 

எல்.எஸ். சங்கர் ஸ்வாமி

பீ புக்ஸ்,

கொல்கத்தா - 700 009.

விலை: ரூ.325

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x