Published : 22 Dec 2018 09:30 AM
Last Updated : 22 Dec 2018 09:30 AM
மனிதகுலத்தின் ஒவ்வொரு படிநிலை வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிப்பது மெய்யியல் அல்லது தத்துவம் எனும் அறிவுத்துறை. இந்திய மெய்யியல் என்பது விரிந்து பரந்தது; இந்து என அழைக்கப்படுவோர், இந்து அல்லாதோர், கடவுளை நம்புவோர், நாத்திகர்கள் என இந்திய மெய்யியலின் பல்வேறு பிரிவுகளும் மனிதரின் அறிவுத் தேடலை, ஆன்மிகத் தேடலை சுட்டிக்காட்டுவதாக அமைகின்றன. புகழ்பெற்ற பேராசிரியர்கள் சதீஷ் சந்திர சாட்டர்ஜி, திரேந்திர மோகன் தத்தா ஆகியோர் எழுதிய இந்நூல் சார்வாகம், சமணம், பவுத்தம், வைசேஷிகம், மீமாம்சம், சாங்க்யம், யோகம், வேதாந்தம் ஆகிய பிரிவுகளைச் சிறப்பாக அறிமுகப்படுத்துகிறது. மேற்கத்திய மெய்யியல், கீழைத்தேய மெய்யியல் என்று வகைப்படுத்தப்பட்ட மெய்யியல் துறையின் சிறப்பு அம்சங்களை அறிமுகப்படுத்த உகந்ததாக அமைவதே இந்நூலின் தனித்தன்மை.
அன் இண்ட்ரோடக்ஷன் டு இண்டியன் ஃபிலாசஃபி
சதீஷ் சந்திர சாட்டர்ஜி, திரேந்திர மோகன் தத்தா.
ரூபா வெளியீடு, புதுடெல்லி-2.
விலை: ரூ.195
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT