Last Updated : 02 Aug, 2014 02:55 PM

 

Published : 02 Aug 2014 02:55 PM
Last Updated : 02 Aug 2014 02:55 PM

பாலஸ்தீனத்தில் தொடரும் துயரங்கள்

இந்நூலின் ஆசிரியரான மருத்துவர் ஒரு சீனர். இவர் சிறு வயதில் இஸ் ரேலிய ஆதரவாளராக வளர்க்கப் பட்டவர். அராபியர்கள் குறித்த எதிர்மறையான எண் ணமே அவருக்கு இருந்துள் ளது. 1982-ம் ஆண்டில் இஸ்ரேலியப் போர் விமானங்கள் பெய்ரூட் நகரத்தை இடைவிடாமல் தாக்கியபோது அவர் அதிர்ச்சி யடைந்தார். இஸ்ரேல் குறித்த பார்வை மாறத் தொடங்கியது. பெய்ரூட்டில் போரால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்குச் சேவை செய் வதற்காக விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில் இவர் லண்டனில் பார்த்துவந்த பணியை ராஜினாமா செய் தார்.

இளம் வயதில் கணவரைப் பிரிந்து பெய் ரூட்டுக்குச் சென்ற இவர் சப்ரா-சடிலா படுகொலைச் சம்பவங்களை நேரில் பார்த் தார். பெற்றோர்களைப் பறி கொடுத்து நிற்கும் ஆயிரக் கணக்கான அநாதைக் குழந் தைகளின் முகங்கள் இஸ் ரேல் குறித்த இவரது நல்லெண் ணத்தை மாற்றின. மனித குலம் மிகவும் நாகரிகமாகி விட்டதாகச் சொல்லப்படும் இப்போதும் பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் கடும் தாக்குதலைத் தொடுத்துவரும் இன்றைய நாட்களில் இப்புத்தகம் முக்கியத்துவம் வாய்ந்தது.

1982-ல் நடந்த துயரச் சம்பவங்களைப் பற்றி எழுதிய வர்ணனைகள் நேற்றும் இன்றும் மாற்றமின்றி பொருத்தமாக இருப்பது வேதனைக் குரியது.

பெய்ரூத்திலிருந்து ஜெருசலேம் வரை
ஆங்க் ஸ்வீ சாய் வெளியீடு:
அடையாளம், 1205/1, கருப்பூர் சாலை,
புத்தாநத்தம்.621310 விலை: ரூ.320/-
தொலைபேசி: 04332-273444

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x