Published : 13 Oct 2018 08:55 AM
Last Updated : 13 Oct 2018 08:55 AM
குஜராத்தில் கட்டப்பட்ட சர்தார் சரோவர் அணை மிகக் கடுமையான சர்ச்சைக்குள்ளானது. இந்த அணையால் பல லட்சம் பழங்குடி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்பதுதான் எதிர்ப்புக்கான முக்கியக் காரணங்களில் ஒன்று. இது தொடர்பாக சமீபத்தில் நடந்த ஓர் ஆய்வு இவ்வாறு கூறுகிறது: அணை கட்டுவதற்காக நிலத்தையும் வாழ்வாதாரத்தையும் இழந்த லட்சக்கணக்கான மலைவாழ் பழங்குடி மக்களுக்கு நிலம், வீடு, வேலைவாய்ப்பு போன்றவற்றை 1990-களின் தொடக்கத்தில் அரசு அளித்தது. இடம்பெயர்ந்த இந்த மக்களின் வாழ்க்கை நிலையும் காடுகளில் தொடர்ந்து வாழ்ந்துவருபவர்களின் வாழ்க்கை நிலையும் எப்படி வேறுபடுகிறது என ஒப்பிட்டுப்பார்க்கிறது இந்த ஆய்வுக் கட்டுரை. மலையிலிருந்து இடம்பெயர்ந்த மக்களின் பொருளாதார நிலையை ஒப்பிடும்போது இடம்பெயராமல் இன்னும் மலைக்காடுகளில் வாழும் பழங்குடிகளின் பொருளாதாரம் பின்தங்கிய நிலையில் உள்ளது. நவீன வாழ்க்கைக்கான எல்லா தேவைகளும் இடம்பெயர்ந்த பழங்குடிகளுக்குக் கிடைத்தாலும் அவர்களில் பெரும்பாலானோர் இன்னும் மலைக்காடுகளில் வாழ்வதையே விரும்புகின்றனர். அதேபோல, தற்போது மலைக்காடுகளில் வாழும் பழங்குடியினரும் இடம்பெயர்வதை விரும்பவில்லை. ஆகவே, பழங்குடியினருக்கு வாழ்க்கைத்தரம் என்பது பொருளாதாரத்தில் இல்லை; இயற்கையோடு இயைந்த மரபான வாழ்வில்தான் உள்ளது என்பது தெளிவாகிறது.
Swaminathan S Anklesaria Aiyar and Neeraj Kausal, “Are Resettled Oustees from the Sardar Sarovar Dam Project better off today than their former neighors who were not ousted?”, 2018.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT