Last Updated : 04 Aug, 2018 09:35 AM

 

Published : 04 Aug 2018 09:35 AM
Last Updated : 04 Aug 2018 09:35 AM

ஒரே நேரத்தில் 3 புத்தகக் காட்சிகள்!

தருமபுரியில் முதன்முறையாக தகடூர் புத்தகப் பேரவையின் முன்னெடுப்பில் புத்தகத் திருவிழா மதுராபாய் சுந்தரராஜராவ் திருமண மண்டபத்தில் நேற்று தொடங்கியது. உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் இந்தப் புத்தகத் திருவிழாவைத் தொடங்கிவைத்தார். இதற்கென சென்ற வாரம் நடைபெற்ற ‘தருமபுரி வாசிக்கிறது’ எனும் சிறப்பு நிகழ்வை மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி தொடங்கிவைத்தார். இதில், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். தினந்தோறும் மாலையில் நடைபெறவுள்ள இலக்கிய நிகழ்வுகளில் வைரமுத்து, எஸ்.ராமகிருஷ்ணன், திலகவதி, பீட்டர் அல்போன்ஸ், புஷ்பவனம் குப்புசாமி ஆகியோர் உரையாற்றுகின்றனர். ஆகஸ்ட் 12 வரை நடைபெறவுள்ளது.

ஈரோட்டில் புத்தகக் காட்சி நடந்துகொண்டிருக்கும் அதே நேரத்தில் உடுமலைப் பேட்டையிலும் தருமபுரியிலும் புத்தகக் காட்சிகள் தொடங்கியுள்ளன.

உடுமலையில் 7-வது ஆண்டாக உடுமலை புத்தகாலயமும் திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட்டும் இணைந்து நடத்தும் புத்தகக்காட்சி தேஜஸ் மகாலில் நேற்று தொடங்கியது. இதனையொட்டி நடத்தப்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கென பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர்.  தினமும் மாலையில் நடைபெறவுள்ள இலக்கிய நிகழ்வுகளில் அருள்மொழி, செந்தலை கவுதமன், இரா.தனிக்கொடி உள்ளிட்டோர் பங்கேற்று பேசுகிறார்கள். இதில், நூல் வெளியீடும் நடைபெறுகிறது. ஆகஸ்ட் 12 வரை புத்தகக் காட்சி நடைபெறவுள்ளது.

- மு.முருகேஷ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x