Published : 26 Aug 2018 09:13 AM
Last Updated : 26 Aug 2018 09:13 AM
பள்ளிகளில் இசையையும் சொல்லித்தர வேண்டும் என்ற கோரிக்கையை பல முன்னோடிகள் கூறிவந்தா லும், அதை நடைமுறையில் செயல்படுத்தி வருபவர் கர்னாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா. இசையில் விருப்பம் உள்ள பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களைக் கொண்டே பள்ளிகளில் சேர்ந் திசைக் குழுவை ஏற்படுத்தும் முயற்சியில் பல ஆண்டுகளாக ஈடுபட்டுவருகிறார். இந்த மாபெரும் இசைப் பணியில் ஒரு மைல் கல் - சென்னை மயிலாப்பூரில் உள்ள சாவித்ரி அம்மாள் கீழ்த்திசை மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 4 மாணவர்கள் அமெ ரிக்காவுக்குச் சென்ற சேர்ந் திசைக் குழுவில் இடம் பெற்றுப் பாடியது.
அந்தப் பள்ளியின் அறநெறி வகுப்பில் டி.எம்.கிருஷ்ணா குழுவினரின் (வயலின்: அக் கரை சுப்பலட்சுமி. கடம்: சந்திரசேகர சர்மா. கஞ்சிரா: அனிருத் ஆத்ரேயா) கர்னாடக இசை நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது.
சூடு பிடித்த தீர்மானம்
பாடகரின் ஆலாபனை யோடு தொடங்கும் சம்பிரதாய மான கச்சேரியாக இல்லாமல், துரிதகதியுடன் அனல் பறக்கும் தீர்மானத்துடன் தொடங்கியது கச்சேரி.
‘நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்
நிறைந்த சுடர்மணிப் பூண்,
பஞ்சுக்கு நேர்பல துன்பங்களாம் இவள்
பார்வைக்கு நேர்பெருந்தீ
வஞ்சனை யின்றிப் பகையின்றிச் சூதின்றி
வையக மாந்தரெல் லாம்,
தஞ்சமென் றேயுரைப்பீர் அவள் பேர் சக்தி
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்...’
- என்னும் மகாகவி பாரதியின் பாடலைப் பாடி முடித்ததும், ‘‘இது யார் எழு திய பாடல்?’’ என்று மாணவர் களிடம் கேட்டார் கிருஷ்ணா.
‘‘பாரதியார்’’ - ஒட்டுமொத்த மாக ஒரே குரலில் முழங்கின குழந்தைகள்.
‘‘சரி, பாரதி யார்?’’ கிருஷ்ணாவிடம் இருந்து பறந்தது அடுத்த கேள்வி.
‘‘சுதந்திரப் போராட்ட வீரர்.. தேசியக் கவி.. சுதந்திர எண் ணத்தைப் பாட்டில் பாடிய வர்..’’ என்று பன்முகத் திறன் கொண்ட பாரதியை ஆளுக் கொன்றாக கொண்டாடி மகிழ்ந்தனர் குழந்தைகள்.
குழந்தைகளை அசெம் பிளி ஹாலில் உட்காரவைத்து விட்டு, வெறுமே கச்சேரி நடத்திவிட்டுப் போகாமல், குழந்தைகளோடு சகஜமாக பேசியும், நடுநடுவே அவர்களி டம் கேள்வி கேட்டும், அவர் களையே உடன் பாடவைத்தும் வித்தியாசமான கச்சேரி அனுபவத்தை வழங்கினார் டி.எம்.கிருஷ்ணா.
கருப்பொருளான அரசியலமைப்பு
‘‘இந்திய அரசியலமைப்பு சட்டம் நமக்கு என்னென்ன உரிமைகளை வழங்கியுள் ளது?’’ என்று மாணவர்களிடம் கேட்டார்.
‘‘பேச்சுரிமை, எழுத்து ரிமை, ஒற்றுமை, மத நல்லிணக் கம், சகோதரத்துவம்..’’ என்று பலவற்றை மாணவர்கள் கூறி னர். ‘‘ஆண், பெண், திரு நங்கை போன்ற பாகுபாடுகள் இல்லாமல் பாலின சமத்துவ மும் அரசியலமைப்பு நமக்கு அளித்திருக்கும் உரிமைதான்’’ என்றார் ஒரு மாணவி.
இந்த விஷயங்களை அடிப் படையாகக் கொண்ட பாடல் களையும், கலைஞர்களுக்குள் ஒருங்கிணைவு இருந்தால் தான் கச்சேரி ருசிக்கும் என்பதையும் உதாரணங் களோடு விளக்கினார் கிருஷ்ணா.
பாடுவதற்கு துணையாக வயலின் வாசிக்கும் கலை ஞரின் பங்களிப்பை விளக்கிய வர், தான் பாடுவதற்கு சம்பந் தம் இல்லாமல் வயலின் வாசித்தால் உண்டாகும் விளைவுகளையும் மேடை யிலேயே நிகழ்த்திக் காட்டி னார்.
அதேபோல, தாள வாத்தி யக் கலைஞர்கள் தனித்தனியே தங்கள் வாத்தியங்களில் கேள்வி பதிலாக வாசிக்கும் ஜதிக் கோவைகளையும், ஒரு புள்ளியில் எப்படி இரண்டு வாத்தியங்களும் இணை கிறது என்பதையும் அவர் சுவா ரசியமாக விளக்கியது மாண வர்களை குதூகலப்படுத் தியது.
உருக்கமான பாட்டு
காந்தி தனது சபர்மதி ஆசிரமத்தில் ‘நாராயணனும் நீதான், பிரம்மாவும் நீதான், இயேசுவும் நீதான், அல்லா வும் நீதான், நீ என்பது எல்லா மும்தான்’ என்பதை விளக்கும் இந்திப் பாடலை பாடச் சொல் வார். அந்தப் பாடலைப் பாடுகிறேன் என்று கூறி, புகழ்பெற்ற `நாராயண து’ பாடலை உருக்கமாகப் பாடி னார்.
இறுதியில் `ரகுபதி ராகவ’ பாடலை கிருஷ்ணாவுடன் இணைந்து மாணவர்கள் பாடத் தொடங்கியது நெகிழ்ச்சி யின் உச்சம்!
புறம்போக்கு பாடல்
ஏறக்குறைய நிகழ்ச்சி முடிந்துவிட்ட நிலையில் கிருஷ்ணாவிடம் ‘புறம் போக்கு’ பாடலை பாடச் சொல்லி அன்பு வேண்டுகோள் வந்தது. சென்னை எண்ணூர் அனல்மின் நிலையங்கள் வெளிப்படுத்தும் சாம்பலால் மக்கள் படும் அவதியையும், எண்ணூரில் இருக்கும் புறம் போக்கு இடங்களைக் காப் பாற்ற வேண்டியதன் அவசியத் தையும் வலியுறுத்தும் அந்தப் பாடல் மாணவர்களிடையே பிரபலமாகி இருந்ததை அறிந்து கிருஷ்ணாவுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. மேடையில் இருந்து இறங்கி வந்து மாணவர்களுடன் சேர்ந்தே அந்தப் பாடலைப் பாடினார்.
‘புறம்போக்கு’ என்பது ஒரு வசைச் சொல் அல்ல என்பதையும், கட்டுமானம் இல்லாத இயற்கையான நிலப் பகுதியையும் பாது காக்க வேண்டியதன் அவ சியத்தையும் என்றைக்குமான பாடமாக மாணவர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள் என்பது மட்டும் உறுதி!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT