Last Updated : 25 Aug, 2018 09:21 AM

 

Published : 25 Aug 2018 09:21 AM
Last Updated : 25 Aug 2018 09:21 AM

கருணாநிதிக்கு மரியாதை!

கருணாநிதியின் அரசியல், கலையுலக, ஆட்சி நிர்வாகப் பங்களிப்புகளை நினைவுகூரும் விதமாக வந்திருக்கும் ‘ஃப்ரண்ட்லைன்’ சிறப்பிதழ், வரலாற்றுரீதியாக சமூகங்களுக்கிடையே ஏற்பட்டுவிட்ட சமன்குலைவுகளை அதிகாரப் பகிர்வு வழியாக சரிப்படுத்துவதை, திராவிட இயக்கம் இங்கே எப்படிச் செய்தது என்பதைச் சொல்லும் புத்தகமாக விரிகிறது. தலைவராக ஒரு கலைஞர் பரிணாமம் எடுப்பதை ஏ.எஸ்.பன்னீர்செல்வத்தின் கட்டுரை விவரிக்கிறது. அண்ணாவின் மறைவுக்குப் பிறகு கட்சி – ஆட்சிப் பொறுப்புகளை ஏற்ற கருணாநிதி எப்படி எல்லோரும் ஏற்கும் தலைவராகவும் நிர்வாகியாகவும் தன்னை நிறுவிக்கொண்டார் என்பதை ஆர்.கே.ராதாகிருஷ்ணனின் கட்டுரை விவரிக்கிறது. தமிழ் சினிமா வரலாற்றில் கருணாநிதியின் இடத்தை வி.எம்.எஸ்.சுபகுணராஜனின் கட்டுரை வரையறுக்கிறது. பண்ணையார் - கூலியாள் அடிமை முறையை திமுக ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட சட்டங்கள் இங்கு எப்படி ஒழித்தன என்பதை ஜெயரஞ்சனின் கட்டுரை சொல்கிறது. அன்பழகன், கி.வீரமணி, நல்லகண்ணு, திருமாவளவன், பீட்டர் அல்போன்ஸ், கனிமொழி ஆகியோர் நினைவுப் பதிவுகளை நெகிழ்வாக எழுதியுள்ளனர். சீதாராம் யெச்சூரி, வி.எஸ்.அச்சுதானந்தன், தேவ கவுடா ஆகியோரின் பதிவுகள் சம்பிரதாயம் தாண்டிய கருணாநிதியுடனான உளநெருக்கத்தைச் சொல்பவை. இதழில் தொகுக்கப்பட்டுள்ள அரிய படங்கள் மேலும் கனம் சேர்க்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x