Published : 14 Jul 2018 08:58 AM
Last Updated : 14 Jul 2018 08:58 AM
இ
ந்தியாவின் உயர் கல்வி பற்றி சமீபத் தில் வந்த மிக முக்கியமான கட்டுரைகளில் இதுவும் ஒன்று. பல நாடுகளில் பல ஆண்டுகளாகக் கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் முயற்சியாகப் பல்கலைக்கழகங்களில் உள்ள ஆசிரியர்கள், மாணவர் கள் மீது தாக்குதல்களை அரசும், அரசு சார்ந்த அமைப்புகளும் செய்ததை இக்கட்டுரை தொகுத்து வழங்குகிறது.
சுதந்திர இந்தியாவில் நாட்டு நலனை மையப்படுத்தாமல் மீண்டும் மேலை நாட்டுக் கல்வியை முன்னுதாரணமாகக் கொண்டு, கல்வி அமைப்பை ஏற்படுத்துவதை இக்கட்டுரை அழுத்தமாகக் கூறுகிறது. இதன் தொடர்ச்சியாகப் பல்கலைக்கழகங்களின் தன்னாட்சியை, சிந்தனை சுதந்திரத்தைப் பறிப்பது நடந்துவருகிறது. விவசாயம், உள்நாட்டுச் சிந்தனை, உள்நாட்டு மருத்துவம், கைவினை, கலை என்பன சார்ந்த உயர் கல்விப் படிப்புகள் எல்லாம் வேலைவாய்ப்பு தராதவை என்று அவற்றின் நிதிகளும் குறைக்கப்பட்டுவருகின்றன. இந்தியாவில் மாணவர் அரசியலுக்கு நீண்ட வரலாறு இருந்தாலும், அது வெளிஉலக அரசியலைச் சார்ந்தே இருந்தது. கல்வி நிறுவனத் தேர்தலில் சாதி, அரசியல் பின்புலம், போலி வாக்குறுதி, பணம் எல்லாம் வாக்குகளை வாங்கும் முக்கியக் கருவிகளாக இருந்தன. ஆனால், இப்போது உள்ள மாணவர் அரசியல் மாணவர்கள் சமூகத்தின் பிரச்சினைகளை மையமாக வைத்து நடைபெறுகின்றன. பெண்களும் முதல் தலைமுறை பட்டதாரிகளும் உயர் கல்வியில் இடம்பெறுவது இந்த மாற்றத்துக்கு அடித்தளமாகும். இவற்றை ஒடுக்கும்போது கல்விச் சுதந்திரமும் சேர்த்தே பறிக்கப்படுகிறது.
சம்பளக் குழுவின் பரிந்துரையால் அதிக வருவாய் பெறும் ஆசிரியர்கள் ஒருபுறம் இருக்க, பொது, தனியார் கல்வி நிறுவனங்களில் மிகக் குறைந்த ஊதியத்தில் பல சிக்கல்களுக்கு நடுவே ஆசிரியர்கள் பணிபுரிந்துவருகின்றனர். ஆசிரியர்கள் முதல் துணைவேந்தர் வரை நியமிப்பதிலுள்ள முறைகேடுகள், கல்விக் குழு முதல் பாடத்திட்டம் வரை எல்லாவற்றையும் கட்டுப்படுத்த நினைக்கும் அரசியல் செயல்முறை என்று அடுக்கடுக்காகக் கல்வித் தரத்தைக் குறைப்பதும் இப்போதைய சிக்கல்களில் முதன்மையானவை. இந்தக் குறைபாடுகளின் தொடர்ச்சியாகவே கல்விச் சுதந்திரக் கட்டுப்பாடு இருக்கிறது.
Nalini Sundar, “Academic Freedom and Indian Universities” Economic and Political Weekly,
June 16, 2018.
- இராம சீனுவாசன், பொருளியல் நிபுணர்.
தொடர்புக்கு: seenu242@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT