Published : 06 Jul 2018 09:14 AM
Last Updated : 06 Jul 2018 09:14 AM
திருவனந்தபுரம் அனந்த பத்ம நாப சுவாமி கோயில், குருவா யூர் கிருஷ்ணன் கோயில் உள்ளிட்ட கேரளத்தின் பிரபல கோயில்களில் உள்ள சுவரோவியங்களைத் தரிசிப்பது பேரானந்தம். கேரளத்தின் பிரபல மியூரல் ஓவியரான பிரின்ஸ் தொன்னக்கல் மகாபாரதக் காட்சிகளை ‘பகவத் மியூரல்’ என்ற தலைப்பில் வரைந்து, அவரின் 35 மாணவிகளால் வண்ணம்தீட்டப்பட்ட ஓவியங்களின் கண்காட்சி, சென்னை - லலித் கலா அகாடமியில் ஜூலை 10 வரை நடக்கவுள்ளது.
மகாபாரதத்தை வியாசர் கூறக் கூற அதை வேகமாக எழுதும் விநாயகர், பிள்ளை பேறுக்காக காத்திருக்கும் காந்தாரி, அம்புப் படுக்கையில் படுத்துள்ள பீஷ்மர், குருஷேத்திரக் காட்சிகள்… என ஒவ் வொரு ஓவியமும் விழிகளை விரிய வைக்கின்றன. கண்காட்சியில் இடம்பெற்றிருந்த பிரம்மாண்ட ‘விஸ்வரூப தரிசனம்’ ஓவியத்தை வரைந்ததோடு, தானே அதற்கு வண்ணமும் தீட்டியிருந்தார் பிரின்ஸ் தொன்னக் கல். ஓவியக் கண்காட்சியைத் தொடங்கிவைத்து ஓவியர்கள் மணியம் செல்வன், கேசவ், மோகினியாட்டக் கலைஞர் கோபிகா வர்மா ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற நடிகரும் ஓவியருமான சிவகுமார், ‘‘கலைகளிலே அவள் ஓவியம் என்றார் கவியரசு கண்ணதாசன். இந்த கண்காட்சியில் இடம்பெற்ற ஓவியங்களில் பங்காற்றிய 35 ஓவியப் பெண்களுக்கும் எனது பாராட்டுகள். சில அரூப ஓவியங்களைப் பார்ப்பதற்கும் புரிந்து கொள்வதற்கும் பயிற்சி தேவை. ஆனால் ரியலிஸ்டிக் வகை ஓவியங்கள் எல்லோருக்குமானவை. இந்த வகை ஓவியங்களை பாரம்பரிய அழகின் தொடர்ச்சியாகவே நான் பார்க்கிறேன். இதுபோன்ற ஓவியக் கலை முயற்சிக்கு என்னுடைய பாராட்டுகள்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT