Last Updated : 04 Jan, 2025 06:18 AM

 

Published : 04 Jan 2025 06:18 AM
Last Updated : 04 Jan 2025 06:18 AM

ப்ரீமியம்
திறனாய்வுத் திசைவெளி

இலக்​கி​யங்கள் வாழ்க்கை​யைத் திறனாய்வு செய்​கின்றன. திறனாய்​வுகள் இலக்​கி​யங்களை வாழ்விக்க வைக்​கின்றன. இலக்கியத்தை அதன் புலப்​பாட்டு நுட்​பங்​களுடன் பண்பாட்டுப் பெரு​ம​தி​களுக்​குள் இட்டுச்​செல்வது திறனாய்வே. தனிமனிதப் படைப்பான இலக்​கி​யத்தை ஒரு சமூகப் பண்டமாக மாற்றுவது திறனாய்​வின் பணியாகிறது. படைப்பு – படைப்​பாளன் - நுகர்வு ஆகிய மூன்று தரப்​புக்​கும் அறிவு - உணர்வுப் பாலமாகத் திறனாய்வு அமைகிறது.

திறனாய்​வின் தொடக்கம் ரசனை​தான். ஆனால், அதுவே முடிவல்ல. வாழ்க்கையை, அதன் பன்முகக் கோணங்களை வெளிப்​படுத்​தும் இலக்​கியப் படைப்​பைச் சமூகமயப்​படுத்துவது திறனாய்வே. நவீனத் திறனாய்​வின் தடங்கள் என்று பார்க்​கிற​போது, தொடக்​கத்​தில் கம்பன், பின்னர் கம்பனில் இருந்து இளங்கோ, அதற்​குப் பின்னர் வள்ளுவன் என்று படைப்​பாளர்​களின் ஆக்கத்​திறனில் மையமிட்​டது. பின்னர் பாரதி, புது​மைப்​பித்தன் வரை அது தொடர்ந்​தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x