Published : 30 Dec 2024 06:57 AM
Last Updated : 30 Dec 2024 06:57 AM
தனியார் தொலைக்காட்சிகள், ஸ்மார்ட்போன்கள் இல்லாத காலக்கட்டத்தில் அந்த இடத்தில் இருந்தவை காமிக்ஸ் நாவல்களே. வாசிப்புப் படிக்கட்டில் ‘இரும்புக்கை மாயாவி’யைக் கடக்காத ஒரு தலைமுறை இருக்கவே முடியாது. காலமாற்றத்தால் தொலைந்து போன அந்த காமிக்ஸ்களைத் தேடி ஆராய்ந்துவருபவர் கிங் விஸ்வா. 10 ஆயிரம் காமிக்ஸ் (சிறார் இலக்கியம் உள்பட) நூல்களைத் தேடிச் சேகரித்துள்ளார். காமிக்ஸ் உலகம் பற்றிய அவரது 5 நூல்கள் இந்தப் புத்தகக் காட்சியை ஒட்டி யாவரும் பதிப்பகம் (அரங்கு எண்: 15, 16) வெளியிட்டுள்ளது.
ஜப்பானின் மங்கா காமிக்ஸ் பற்றிய விஸ்வாவின் ‘ஜப்பானிய மங்கா காமிக்ஸ் - அறிமுகமும் ஆளுமைகளும்’ நூல் உலக அளவில் மங்கா காமிக்ஸ் அதிகமாகப் படிக்கப்படுவதற்கான காரணத்தை விளக்குகிறது. மங்கா காமிக்ஸ் நாம் படிக்கும் முறைக்கு நேரெதிராக வடிவமைக்கப்படுகிறது. வாசிப்பில் அது ஏற்படுத்தும் சூட்சுமத்தை நூல் திறந்து காட்டுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT