Published : 05 Oct 2024 06:30 AM
Last Updated : 05 Oct 2024 06:30 AM
இயா யான்பெரி ஸ்வீடனைச் சேர்ந்த எழுத்தாளர். 2012இல் அவரது 45ஆவது வயதில், முதல் நாவலின் மூலம் இலக்கியப் பயணத்தை ஆரம்பித்தார். அதற்குப் பின் ஒரு நாவல், இரண்டு சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். முதல் நாவலிலிருந்தே கவனம் பெற்ற எழுத்தாளர் இவர். இவரது மூன்றாவது நாவலான ‘விவரணை’ புக்கரின் இறுதிப் பட்டியலில் நுழைந்தது மட்டுமன்றி, ஸ்வீடனின் ஆறு இலக்கிய விருதுகளின் இறுதிப் பட்டியலுக்குச் சென்றது; அவற்றில் ஒரு விருதை வென்றும் இருக்கிறது.
கடுங்காய்ச்சலில் விழுந்த பெண், அவரது கடந்த காலத்தில் முக்கியப் பங்கு வகித்துப் பின் பிரிந்த நான்கு பேருடனான நினைவுகளை மனதிற்குள் மறுபடியும் மீட்டிப் பார்ப்பதே இந்த நாவல். நோய்மையில் மனம் இளகுகிறது. தனிமை அந்த இளக்கத்தைக் கூட்டுகிறது. ஆனால், கதைசொல்லி, பிரிந்த உறவுகளிடம் சற்று வேறுவிதமாக நடந்துகொண்டிருக்கலாம் என்று யோசிக்கவில்லை. வெறுமனே நினைவுகளை மீட்டிப் பார்க்கிறார். ஏனென்றால், இந்த நான்கு உறவுகளிலுமே முடிவுசெய்யும் சக்தியாக அவர் ஒருபோதும் இருந்ததில்லை.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT